ஜெயலலிதா மறைவுக்கு துக்கம்- மொட்டை போட்டு கதறி அழுத பெண்கள் #Jayalalithaa
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஆண் தொண்டர்கள் மட்டுமல்லாது பெண்களும் மொட்டை அடித்து தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நேற்று மாலை 6 மணியளவில் சென்னை மெரினா கடற்கடையில் உள்ள எம்ஜியார் நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மறைந்த முதல்வருக்கு அஞ்சலி செலுத்த பொது மக்களுக்கு நேற்று அனுமதி வழங்கப்படவில்லை.பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. எனவே, உள்ளே யாரும் நெருங்கமுடியவில்லை.
விடிய விடிய தொண்டர்கள் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் படுத்து உறங்கினர். ஜெயலலிதாவின் நினைவிடத்தை பார்க்க பொது மக்கள் இன்று காலை முதல் அனுமதி வழங்கப்பட்டது. நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

மொட்டை போட்டு அஞ்சலி
கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை சுற்றிலும் தடுப்பு கம்பி வைக்கப்பட்டது. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தங்க தமிழ்செல்வன் தலைமையில் 60 பேர் இன்று காலை 8.30 மணியளவில் ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று வணங்கினார்கள். அதன்பிறகு சமாதிக்கு இடதுபுறம் அமர்ந்து மொட்டையடித்து முடிகாணிக்கை செலுத்தினார்கள்.

ஈடு செய்ய முடியாத இழப்பு
புரட்சி தலைவி அம்மாவின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. தமிழகமே துயரத்தில் இருக்கும் போது எங்களாலும் சோகத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் மொட்டை அடித்து முடி காணிக்கை செலுத்தினோம் என்று தங்கத் தமிழ்செல்வன் கூறினார்.
Chennai: A Woman gets her head tonsured as a mark of respect for #Jayalalithaa pic.twitter.com/oc0mpQW8kF
— ANI (@ANI_news) December 7, 2016
பெண்கள் மொட்டை போட்டு அஞ்சலி
அம்மாவின் மீதுள்ள அளவு கடந்த பாசத்தால் அவரது ஆண்கள் , பெண்கள் என தீவிர தொண்டர்கள் மொட்டை அடித்து தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
நேரம் ஆக ஆக இங்கு சென்று அஞ்சலி செலுத்துவோர் கூட்டம் அதிகரித்துக் கொண்டே உள்ளது. ஏராளமான பெண்கள் கண்ணீர் மல்க அழுது அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications