ஜெ. ஒரு வாரம் கழித்து அப்பல்லோவில் சேர்ந்திருந்தால்.. மறைத்து வைத்திருந்த விஷத்தை கக்கிய கருணாஸ்!
ஜெயலலிதா ஒரு வாரம் கழித்து அப்பல்லோவில் சேர்ந்திருந்தால் நான் அமைச்சராகி இருப்பேன் என கருணாஸ் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: ஜெயலலிதா ஒரு வாரம் கழித்து அப்பல்லோவில் சேர்ந்திருந்தால் நான் அமைச்சராகி இருப்பேன் என கருணாஸ் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபையில் நேற்று பேச அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து திமுக சார்பில் அண்ணா அறிவாலயத்தில் இன்று போட்டி சட்டமன்றம் நடைபெற்றது.
இந்த போட்டி சட்டசபையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்கள், காங்கிரஸ் எம்எல்ஏக்கள், அதிமுக ஆதரவு எம்எல்ஏ. கருணாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிமுகவினர் அதிர்ச்சி
அதிமுகவின் ஆதரவால் எம்எல்ஏவான முக்குளத்தோர் புலிப்படையை சேர்ந்த கருணாஸ், திமுகவினரை காட்டிலும் போட்டி சட்டமன்றத்தில் படு ஆவேசமாக பேசினார். அவரது பேச்சு அதிமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சற்றும் எதிர்பாராதது
குறிப்பாக அதிமுக அரசை கவிழ்த்துவிட்டு திமுக செயல்தலைவர் ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும். ஸ்டாலின் தலைமையில் விரைவில் தமிழக சட்டசபை நடைபெறும் என்று கருணாஸ் பேசியதெல்லாம் அதிமுகவினர் சற்றும் எதிர்பாராதது.

அமைச்சராகி இருப்பேன்
இவை எல்லாவற்றுக்கும் மேல் பொட்டு வைத்தார் போல் கருணாஸ் பேசிய பேச்சு அதிமுகவினரை அதிர்ச்சியின் உச்சத்துக்கே அழைத்து சென்றுள்ளது. அதாவது ஜெயலலிதா இன்னும் ஒரு வாரம் தள்ளி அப்பல்லோவில் அட்மிட்டாகியிருந்தால் நான் அமைச்சராகி இருப்பேன் என்று கூறியுள்ளார் கருணாஸ்.

கருணாஸின் பெரும் கவலை
ஜெயலலிதா மரணமடைந்ததை விட, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை விட தனக்கு அமைச்சர் பதவி கிடைக்காமல் போனதுதான் கருணாஸ்க்கு பெரும் கவலையாக உள்ளது.

கொட்டித் தீர்த்த கருணாஸ்
அட்மிட் ஆனதுதான் ஆனார் ஒரு வாரம் கழித்து அப்பல்லோவில் அட்மிட்டாகியிருந்தால் நான் அமைச்சராகியிருந்திருப்பேனே என இத்தனை நாள் மனதில் தேக்கி வைத்திருந்த வலியை போட்டி சட்டமன்றத்தில் கொட்டித் தீர்த்தார் கருணாஸ்.

இப்போதே துண்டு போட்ட கருணாஸ்
இதன்மூலம் வரும் தேர்தலில் திமுகவுக்குதான் தனது ஆதரவு என்றும் திமுக வெற்றிபெற்றால் தனக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்றும் இப்போதே துண்டை போட்டு வைத்துள்ளார் ஜெயலலிதா தயவில் எம்எல்ஏவான கருணாஸ்.

விட்டுப்போன சொத்து
ஜெயலலிதா உடல் அஞ்சலியின்போதே செல்பி எடுத்து சிரித்தபடி காணப்பட்டவர்தான் கருணாஸ். இது போன்றவர்கள்தான் ஜெயலலிதா சேர்த்து வைத்து விட்டுப் போன "சொத்து"!
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications