ஹாசினி கொலை வழக்கில் உச்சபட்ச தண்டனை கிடைக்கும் என நம்பிக்கை- வழக்கறிஞர் கண்ணதாசன்
ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளதாக ஹாசினி தரப்பு வழக்கறிஞர் கண்ணதாசன் தெரிவித்தார்.
Recommended Video

செங்கல்பட்டு: ஹாசினி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தஷ்வந்துக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக ஹாசினி தரப்பில் வாதாடும் வழக்கறிஞர் கண்ணதாசன் தெரிவித்தார்.
போரூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பாபு- ஸ்ரீதேவி தம்பதியின் மகள் ஹாசினி (7). கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த ஹாசினியை அதே குடியிருப்பில் வசித்துவரும் மென்பொருள் பொறியாளர் தஷ்விந்த் பாலியல் பலாத்காரம் செய்ததுடன் பெட்ரோல் ஊற்றி படுகொலை செய்துள்ளார். இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் கொலை, பலாத்காரம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவத்தில் குற்றவாளி தஷ்வந்த் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணையின் போது போலீஸார் குற்றத்தை நிரூபிப்பதற்கான முறையான ஆவணங்களைத் தாக்கல் செய்யாததால் தஷ்வந்த் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுவதாக ஹைகோர்ட் அறிவித்தது. குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதால் தஷ்வந்திற்கு கடந்த செப்டம்பர் மாதம் ஜாமீன் கிடைத்தது.
இதையடுத்து இந்த வழக்கானது செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இதுதொடர்பாக இன்று நீதிபதி மகாதேவன் தீர்ப்பு வழங்கவிருக்கிறார்.
இந்நிலையில் ஹாசினி பெற்றோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கண்ணதாசன் கூறுகையில் நேரடி சாட்சிகள் இல்லாவிட்டாலும் அறிவியல்பூர்வமாக குற்றங்களை நிரூபித்தோம். எனவே தஷ்வந்துக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளதாக அவர் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications