நிபந்தனை நிறைவேறினால்… நெக்ஸ்ட் செகண்ட்… சேர்ந்திடுவோம்… ஓபிஎஸ் உறுதி
நிபந்தனைகள் நிறைவேறும் வரை தர்மயுத்தம் தொடரும் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார். நிபந்தனைகள் நிறைவேறினால் அடுத்த வினாடி இரு அணிகளும் இணைந்துவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை: நிபந்தனைகள் நிறைவேறினால் அடுத்த வினாடியே பிரிந்துள்ள இரு அணிகளும் இணைந்துவிடும் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.
முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் தொடர்பாக கூடுதல் ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துவிட்டு ஓபிஎஸ் சென்னை திரும்பினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள் அனைவருடன் கலந்து பேசி அது தொடர்பாக முடிவு எடுக்கப்படும்.

மோடி சந்திப்பு
தமிழக மக்களின் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடியிடம் கோரிக்கை மனுவாக கொடுத்து உள்ளோம். இவற்றை கவனமாக கேட்ட பிரதமர் பரிசீலிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

அடுத்த வினாடி
இரு அணிகளின் இணைப்பைப் பொருத்தவரை, சில கோரிக்கைகளை முன் வைத்து உள்ளோம். கோரிக்கைகள் நிறைவேறும் வரை தர்மயுத்தம் தொடரும். நிபந்தனைகள் நிறைவேற்றினால் அடுத்த வினாடியே சேர்ந்துவிடுவோம் என்று ஓபிஎஸ் கூறினார்.

தேர்தல் ஆணையத்திடம் புகார்
முன்னதாக, இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் டிடிவி தினகரன் தீர விசாரிக்கப்பட வேண்டும் என்றும் ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாகவும் விசாரிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்தார்.

தர்மயுத்தம்
சசிகலா குடும்பத்தை அதிமுகவில் இருந்து முற்றிலும் அகற்றும் வரை தர்மயுத்தம் தொடரும் என்று ஓபிஎஸ் தொடர்ந்து ஓபிஎஸ் வலியுறுத்தி வருகிறார். டெல்லி சென்றும் அவர்களுக்கு எதிராகவே பிரதமரின் சந்திப்பின் போதும் பேசப்பட்டதாக அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications