எடுத்துக் கொடுத்த இளங்கோவன்.. பிடித்துக் கொண்ட விஜயகாந்த்.. மாட்டிக் கொண்ட ஜெ.!
அரியலூர்: தேர்தல் நேரத்தில் தவறாமல் எம்.ஜி.ஆரின் பெயரை பயன்படுத்தி வருகிறார் ஜெயலலிதா. ஆனால் அவர் எந்த ஒரு திட்டத்திற்காவது எம்.ஜி.ஆரின் பெயரை வைத்திருப்பாரா? என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் அரியலூர் தொகுதியில் தேமுதிக சார்பில் ராமஜெயவேல் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அரியலூரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில்,

எம்.ஜி.ஆர்.
தேர்தல் நேரத்தில் தவறாமல் எம்.ஜி.ஆரின் பெயரை பயன்படுத்தி வருகிறார் ஜெயலலிதா. ஆனால் அவர் எந்த ஒரு திட்டத்திற்காவது எம்.ஜி.ஆரின் பெயரை வைத்திருப்பாரா? இல்லையே.

உளவு
தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ்-மக்கள் நலக் கூட்டணிக்கு மக்களிடம் ஆதரவு பெருகிக் கொண்டே இருக்கிறது. இதனால் அதிமுகவும், திமுகவும் தங்களின் உளவுத் துறை மூலம் எங்களை கண்காணித்து வருகின்றன.

ரவுடிகள் ராஜ்ஜியம்
எங்களுக்கு எந்த உளவுத் துறையும் இல்லை. மக்களும், தொண்டர்களுமே எங்கள் கூட்டணியின் உளவுத் துறை. தமிழகத்தில் தற்போது ரவுடிகள் ராஜ்ஜியம் நடந்து கொண்டிருக்கிறது.

ஊழல்
அதிமுகவும் சரி, திமுகவும் சரி மக்களை பற்றி நினைப்பதே கிடையாது. அந்த இரண்டு கட்சிகளும் மாறி, மாறி ஆட்சிக்கு வந்து ஊழல் செய்துள்ளன என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இளங்கோவன்
தேர்தலுக்கு தேர்தல் தான் ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர். மீது காதல் வரும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அண்மையில் தெரிவித்திருந்தார். அவர் எடுத்துக் கொடுத்த எம்.ஐி.ஆர். பாயிண்ட்டை கேப்டன் பிடித்துக் கொண்டார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications