மோடியை சந்திக்க தீபா திட்டம்: அத்தையின் மர்ம மரணம் குறித்து விசாரணை கோருகிறார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அடுத்து தீபாவும் டெல்லி சென்று பிரதமரை சந்திக்க உள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்காரி, ரவிசங்கர் பிரசாத், வெங்கையா நாயடு ஆகியோரை சந்தித்து பேசினார்.

After TN CM, Deepa plans to meet Modi

இதையடுத்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவு 12 அதிமுக எம்.பி.க்கள் மைத்ரேயன் தலைமையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசினர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் பிரணாபிடம் மனு கொடுத்தார்கள்.

இரண்டு அணியினரும் டெல்லி சென்று வந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் டெல்லிக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். அவர் பிரதமர் மோடி மற்றும் பிரணாபை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.

தனது அத்தையின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தீபா மோடி மற்றும் பிரணாபிடம் கோரிக்கை விடுக்க உள்ளாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+