பெட்ரோல், டீசல் விலை பயங்கர உயர்வு.. எண்ணெய் நிறுவனங்களை சுட்டிக்காட்டி தப்பி ஓடும் மோடி அரசு
சென்னை: பெட்ரோல், டீசல் விலையை மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்களை பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நிலையற்ற இந்த விலை உயர்வு ஏற்ற இறக்கங்கள் ஏழை, எளிய நடுத்தர மக்களின் அன்றாட வாழ்க்கையைக் கடுமையாக பாதிக்கவே செய்கிறது என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்வதில்லை.
இந்தியாவில் மத்திய அரசுதான் பெட்ரோல், டீசல் விலை உயர்வை நிர்ணயம் செய்து வந்தன. ஆனால் எண்ணெய் நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்திப்பதாகக் கூறி மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களிடம் விலை நிர்ணயிக்கும் அதிகாரத்தைக் கொடுத்தது.,
இதன் மூலமே பெட்ரோல், டீசல் விலையை மாதம் 2 முறை மாற்றி அமைக்கின்றன எண்ணெய் நிறுவனங்கள்.. இப்படி செய்துவிட்டதன் மூலம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்ற எதிர்க்கட்சிகளின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து மிக இலகுவாக தம்மை தற்காத்துக் கொள்கிறது மத்திய அரசு.

சொற்ப காசு குறைவு
கடந்த 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி கடந்த பிப்ரவரி 1-ந் தேதி வரை பெட்ரோல் விலை 10 முறை குறைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் 50 காசு, 35 காசு என்ற அளவில்..தான் இதேபோல் 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து 2015 பிப்ரவரி 1-ந் தேதி வரை டீசல் விலை 6 முறை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 17 ரூபாய் 11 காசும், டீசல் விலை லிட்டருக்கு 12 ரூபாய் 96 காசும் குறைந்தது.

ரூபாய் கணக்கில் அதிகரிப்பு
இதன் பின்னர் பெட்ரோல், டீசல் விலை 3 முறை உயர்த்தப்பட்டது. இதனால் பெட்ரோல், டீசல் விலை ரூ8 மற்றும் ரூ6 ஆக உயர்ந்தது. இப்படி சில்லறையாக அதாவது 50 காசு, 40 காசு அளவுக்கு விலை குறைப்பு என அறிவிப்பு வரும்.. அதன் பின்னாலேயே ரூ4 அதிகரிப்பு எனவும் அறிவிப்பும் வரும்..

ஒதுங்கும் மத்திய அரசு
இத்தகைய குழப்பமான நிலையைப் பற்றியெல்லாம் மத்திய அரசு கண்டுகொள்வதே இல்லை.. எண்ணெய் நிறுவனங்கள் பாடு... பொதுமக்களின் பாடு என ஒதுங்கிக் கொண்டிருக்கிறது மத்திய அரசு..
பெட்ரோல், டீசல் என்பது மக்களின் அடிப்படை தேவைகளில் முதன்மையானதும் கூட.. இவற்றின் விலை ஏற்றம் மக்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையே பல முனைகளில் இருந்தும் தாக்கக் கூடியது.

அதிகாரத்தை திரும்பப் பெறுக!
இந்த விலையை கட்டுப்படுத்தி பொதுமக்களின் வாழ்க்கைதரத்தை மேம்படுத்துவதுதான் ஒரு மத்திய அரசின் கடமையே தவிர.. எனக்கு ஒன்றும் தெரியாது.. எண்ணெய் நிறுவனங்கள்தான் பொறுப்பு என தட்டிக் கழித்து ஓடிப் பம்மிக் கொள்வது 'பொறுப்புள்ள' ஒரு அரசுக்கு அழகல்ல மிஸ்டர் மோடி சர்க்காரே!!
இதனால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருமித்த குரலில் விலை நிர்ணய அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து திரும்பப் பெற்று மத்திய அரசே தம் வைத்துக் கொள்ள வேண்டும் என குரல் எழுப்புகின்றன. செவிசாய்க்கு டெல்லி பேரரசு?
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications