Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜக கூட்டணியை விரும்பும் தேமுதிக எம்.எல்.ஏக்கள்… விஜயகாந்துக்கு ஃபேஸ்புக்கில் கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க அணியில், தே.மு.தி.க., இடம் பெற வேண்டும் என, விஜயகாந்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள், 'பேஸ்புக்' சமூக வலைதளத்தை கையில் எடுத்துள்ளனர்.

மக்களவைத் தேர்தலில் தேமுதிகவை அணியில் இழுக்க திமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் முயற்சித்து வருகின்றன.

தே.மு.தி.க., எந்த அணியில் இடம் பெறும்' என, பலத்த எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், தி.மு.க.,வை ஒதுக்கிவிட்டு விட்டு, பா.ஜ.க அணியில் இடம் பெற, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் பச்சை கொடி காட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையில் தொழிலதிபர் ஒருவரின் வீட்டில், பா.ஜ.க மூத்த தலைவரும், தே.மு.தி.க., முக்கிய பிரமுகரும் நடத்திய பேச்சுவார்த்தையில், சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எம்.எல்.ஏக்கள் கடிதம்

எம்.எல்.ஏக்கள் கடிதம்

'பா.ஜ.க அணியில், தே.மு.தி.க., இடம் பெற வேண்டும்' என, விஜயகாந்துக்கு அழுத்தம் கொடுக்க, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள், 'பேஸ்புக்' சமூக வலைதளத்தை கையில் எடுத்துள்ளனர். தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் சந்திரகுமார், பார்த்திபன் ஆகியோர், பேஸ்புக்கில் உள்ள தங்களின் வலைப்பக்கத்தில், 'சராசரி தமிழன்' என்ற பெயரில், விஜயகாந்துக்கு எழுதிய கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

புலியிடம் மாட்டிக்கவா?

புலியிடம் மாட்டிக்கவா?

அ.தி.மு.க.,வோ, தி.மு.க.,வோ தமிழகத்தை ஆளக்கூடது என, தே.மு.தி.க.,வை ஆரம்பித்தீர்கள். அப்படி இருக்கும்போது, அவ்விரு கட்சிகளுடன், எப்படி கூட்டணி அமைக்க முடியும். இப்போது, அ.தி.மு.க.,வோடு கூட்டணி சேர மாட்டீர்கள். ஆனால், தி.மு.க.,வோடு கூட்டணி சேர்ந்தால் என்ன என, உங்களுக்குள் சிந்தனை ஓடிக் கொண்டுள்ளது. பூனைக்கு பயந்து, புலியிடம் மாட்டிக் கொண்ட கதையாக்கி விடாதீர்கள்.

அமைச்சரவையில் இடம்

அமைச்சரவையில் இடம்

பா.ஜ.க- தே.மு.தி.க.,- பா.ம.க.,- ம.தி.மு.க., கூட்டணியே பொறுத்தமானது. உங்களுக்கான தொகுதிகளை பெற்று, வெற்றி பெறுங்கள். மத்திய அமைச்சரவையில் இடம் பெறுங்கள். இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மதிமுகவிற்கு 7

மதிமுகவிற்கு 7

இதனிடையே பா.ஜ.க அணியில், ம.தி.மு.க., இடம் பெறுவது உறுதியாகியுள்ளது. விருதுநகர் உட்பட, 10 தொகுதிகளில் போட்டியிட, அக்கட்சித் தலைவர், வைகோ விருப்பம் தெரிவித்துள்ளார். ஏழு தொகுதிகள் வரை ஒதுக்கீடு செய்ய, பா.ஜ.க முன் வந்துள்ளது.

பாமகவிற்கு 7

பாமகவிற்கு 7

பா.ம.க.,வுடன் கூட்டணி அமைக்கும் பூர்வாங்க பேச்சுவார்த்தையை, முன்னாள் மத்திய அமைச்சர், அன்புமணியிடம், தமிழக பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் முரளீதர் ராவ் நடத்தியுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையில், பா.ம.க., கேட்ட, 10 தொகுதிகளுக்குப் பதிலாக, ஏழு தொகுதிகளை தர, பா.ஜ.க முன்வந்துள்ளது.

தேமுதிகவிற்கு 16

தேமுதிகவிற்கு 16

இதனிடையே சென்னையில் உள்ள தொழிலதிபர் ஒருவரின் வீட்டில், ஆந்திராவை சேர்ந்த, பா.ஜ.க மூத்த தலைவர் ஒருவரும், தே.மு.தி.க., முன்னணி தலைவர் ஒருவரும் சந்தித்து, கூட்டணி தொடர்பாக பேசியுள்ளனர். அப்போது, 16 தொகுதிகளை, தே.மு.தி.க., வுக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

விஜயகாந்த் தலைமை

விஜயகாந்த் தலைமை

மேலும், தமிழகத்தில், தே.மு.தி.க., தலைமையில் மற்ற கூட்டணி கட்சிகள் செயல்படும் என்ற வாக்குறுதியும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், 'பா.ஜ.கவுடன் கூட்டணி அமைக்க வேண்டும்' என்ற கோஷத்தை அடுத்த மாதம், 2ம் தேதி, உளுந்தூர் பேட்டையில் நடக்கும், தே.மு.தி.க., மாநாட்டில், அக்கட்சியினர் தெரிவிக்க உள்ளனர்.

தே.மு.தி.க. உறுதி

தே.மு.தி.க. உறுதி

''ஊழலுக்கு எதிராக மாநாடு நடத்தும் விஜயகாந்த், காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க.,வுடன் எப்படி கூட்டணி அமைப்பார். அவர் மாநாடு நடத்துவதே, பா.ஜ.கவுடன் கூட்டணி என்பதை சொல்லத் தான்,'' பா.ஜ.க- தே.மு.தி.க., கூட்டணி உறுதியான ஒன்று என, தமிழக பா.ஜ.க தலைவர், பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கூட்டணி பேச்சுவார்த்தை

கூட்டணி பேச்சுவார்த்தை

உளுந்தூர்பேட்டை மாநாடு முடிந்த பின், தே.மு.தி.க., அலுவலகத்திற்கு தமிழக பா.ஜ.க தலைவர், பொன்.ராதாகிருஷ்ணன், மேலிட பொறுப்பாளர் முரளீதர்ராவ் ஆகியோர் சென்று, தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை இறுதி செய்கின்றனர். அதன்பின், கமலாலயத்திற்கு விஜயகாந்த் சென்று, பா.ஜ.க நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார் என, தே.மு.தி.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மோடியுடன் விஜயகாந்த்

மோடியுடன் விஜயகாந்த்

பா.ஜ.க உடனான, கூட்டணி குறித்த, முறையான அறிவிப்பு பிப்ரவரி 2ம் தேதி வெளியிடப்பட உள்ளது. அதன்பின், பிப்ரவரி 8ம் தேதி, வண்டலூரில் நடைபெறவுள்ள, பா.ஜ.க பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடியுடன் விஜயகாந்தும் கைகோர்ப்பது உறுதியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+