சிகிச்சைக்காக மீண்டும் வெளிநாடு பயணமாகும் விஜயகாந்த்
சென்னை: சிகிச்சை முடிந்து திரும்பியும் உடல்நிலை இன்னும் சீராகவில்லை என்பதால் மீண்டும் வெளிநாடு போக முடிவு செய்துள்ளாராம் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
லோக்சபா தேர்தலில் விழுந்த அடி அதோடு ஊர் ஊராக பயணித்து தொண்டர்களை சந்தித்து பேசிய விஜயகாந்திற்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது.
சென்னையில் பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் உடல்நிலை சீராகவில்லை. எனவே சிங்கப்பூர் போய் சிகிச்சை பெற்று திரும்பினார்.

பார்க்காத சோகம்
சிங்கப்பூரில் இருந்து சிகிச்சை முடிந்து வந்து பல நாட்கள் ஆகப்போகிறது. ஆனால் கூட்டணிக் கட்சியினர் யாரும் சென்று பார்க்கவில்லை.

நண்பர்களும் வரலையேப்பா
கூட்டணிக் கட்சித்தலைவர்கள் மட்டுமல்ல உடன் நடித்த நடிகர்கள், சக நண்பர்கள் யாருமே போய் விஜயகாந்திடம் நலம் விசாரிக்கவில்லையாம்.

சந்திக்காத விஜயகாந்த்
சிகிச்சை முடிந்து வந்து ஓய்வில் இருப்பதால் தொந்தரவு வேண்டாம் என்று நண்பர்களும், கட்சியினரும் அவரை சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் விஜயகாந்த் யாரையுமே சந்திக்க அனுமதி கொடுக்கவில்லையாம்.

உடனே கிளம்பிய விஜயாகாந்த்
சுதந்திரதினத்தன்று கட்சி அலுவலகத்தில் கொடியேற்றிவிட்டு இனிப்புகளை வழங்கிவிட்டு உடனே கிளம்பியதும் கூட உடல்நலத்தை கருத்தில் கொண்டுதானாம்.

மீண்டும் வெளிநாடு பயணம்
இரண்டு மூன்று முறை சிகிச்சை பெற்றும் இன்னும் உடல்நலம் சீராகவில்லை எனவே மீண்டும் செப்டம்பர் 15ம் தேதிக்கு மேல் வெளிநாடு பயணம் கிளம்பத் தயாராகிவிட்டாராம் விஜயகாந்த்.

அறுவை சிகிச்சை
இம்முறை சிறுநீரக அறுவை சிகிச்சை அல்லது சிறுநீராகம் சீராக சிகிச்சை எடுத்துக்கொண்டு திரும்புவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications