வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் ஜாமீன் மனு தாக்கல்….
மதுரை: வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஜாமின் கேட்டு மூன்றாவது முறையாக உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
திருநெல்வேலியில் வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி கடந்த பிப்ரவரி 20 ம் தேதி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வழக்கை விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி போலீசார், முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தலைமை பொறியாளர் செந்தில் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் இருவரும் பாளையங்கோட்டை சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஏற்கனவே இருமுறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமின் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் மூன்றாவது முறையாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications