இரட்டை இலை சின்னத்தை முடக்க முயன்றவருக்கு சீட்டா..? ஆவேசத்தில் ஆற்காடு அதிமுகவினர்
சென்னை: வேலூர் மாவட்டம் ஆற்காடு சட்டசபை தொகுதியின் அதிமுக வேட்பாளர் கே.வி.ராமதாஸ் மீது கட்சியினரே அதிருப்தியடைந்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம், கட்சியின் இரட்டை இலை சின்னத்தையே முடக்க முன்பொரு முறை கையெழுத்திட்டவர் இந்த ராமதாஸ் என்று கொதித்து போய் குமுறுகின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.
இதுகுறித்து, கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவுக்கு புகார் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளனர் உள்ளூர் அதிமுக நிர்வாகிகள்.

அந்த புகாரில், எம்.ஜி.ஆர் பெற்றுத்தந்ததும், ஜெயலலிதாவின் வெற்றி சின்னமுமாகிய, இரட்டை இலையை முடக்க 1997ம் ஆண்டு கையெழுத்திட்டவர் ராமதாஸ் என்றும், திருநாவுக்கரசு அணிக்கு சென்றவர்தான் இவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2001ம் ஆண்டு, அதிமுகவில் இருந்து ஜெயலலிதா, ராமதாசை நீக்கியதாகவும், அதே ஆண்டு, இவர் மீது காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர் ஒன்று பதிவு செய்யப்பட்டதாகவும், அதிமுகவினர் புகாரில் கூறியுள்ளனர். 20 வருடங்களாக அதிமுகவின் எந்த ஒரு பொதுக்கூட்டம், நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றது இல்லை என்றும், இருமுறை போட்டியிட்டு தோற்ற ராசியில்லாதவர் ராமதாஸ் என்றும் புகார் பட்டியலில் பொறுமியுள்ளனர் அதிமுகவினர்.
-
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை?












Click it and Unblock the Notifications