ஜெ. கைதுக்கு எதிர்ப்பு: புதுவையில் நாளை "பந்த்" நடத்த அதிமுக அழைப்பு! மாநில செயலர் அதிருப்தி!!
புதுச்சேரி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் நாளை அதிமுக சார்பில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிமுக மாநில செயலர் புருஷோத்தமனோ தமக்கு தெரியாமல் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று அதிருப்தி தெரிவித்துள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் தண்டனை பெற்று, கைது செய்யப்பட்ட ஜெயலலிதா, பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனு 6-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில், ஜெயலலிதா கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை புதுச்சேரியில் பந்த் நடைபெறும் என அதிமுக அறிவித்துள்ளது. புதுச்சேரியில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக நகர்ப்புற செயலர் டி.ரவீந்திரன், இந்தப் போராட்டத்துக்கான அழைப்பை விடுத்தார்.
புதுச்சேரி, காரைக்கால், மாஹே, யேனாம் என அனைத்துப் பகுதிகளிலும் பந்த் நடத்தப்படுகிறது. இந்த செய்தியாளர் சந்திப்பின்போது புதுச்சேரி சட்டசபை அதிமுக துணைத் தலைவர் அன்பழகன், எம்.எல்.ஏ.க்கள் ஓம்சக்தி சேகர், எல்.பெரியசாமி, பாஸ்கர் ஆகியோரும் உடன் இருந்தனர்.
மாநில செயலர் அதிருப்தி
இதனிடையே புதுச்சேரி மாநில அதிமுக செயலர் புருஷோத்தமனோ, தமக்கு இந்த முழு அடைப்புப் போராட்டம் பற்றி எதுவுமே தெரியாது என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் புதுச்சேரி அதிமுகவில் கமுக்கமாக இருந்து வந்த உட்கட்சி பூசல் வெடிக்கத் தொடங்கியுள்ளது. புருஷோத்தமனின் இந்த அதிருப்தியால் நாளைய முழு அடைப்புப் போராட்டம் வெற்றி பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications