சென்னை மணலியில் அதிமுக கவுன்சிலர் வெட்டிக் கொலை.. கடைகள் அடைப்பு... பதற்றம் - போலீஸ் குவிப்பு
திருவள்ளூர்: மணலியில் அ.தி.மு.க. கவுன்சிலர் மர்மநபர்களால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டதையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்,
மணலி மண்டலம், 21-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலராக இருப்பவர் முல்லை ஞானசேகர். அப்பகுதி மக்களிடையே மிகவும் பிரபலமானவர்.

இந்நிலையில், முல்லை ஞானசேகர் இன்று மாலை மணலி பேருந்து நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் அவரை சுற்றி வளைத்தனர். சுதாரித்து தப்பிக்க முயற்சி செய்வதற்குள் அந்த நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டிச் சாய்த்தனர். இதனால் சுருண்டு விழுந்த முல்லை ஞானசேகர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். அவர் கொலை செய்யப்பட்டதால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
முல்லை ஞானசேகரை கொன்ற கொலையாளிகளை போலீசார் தேடிவருகின்றனர். மேலும், கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுவதை அடுத்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கடலூரில் முகம் சிதைத்த நிலையில் கிடந்த இளம்பெண் சடலம்.. கொலையாளி யார்? போலீஸ் தீவிரம் -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications