மதுரையில் அதிமுக கவுன்சிலர் தூக்கிட்டு தற்கொலை !
மதுரை: மதுரை மாநகராட்சி 7 -வது வார்டு அதிமுக கவுன்சிலர் தனது அலுவலக அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை செல்லூர் 50 அடி ரோட்டை சேர்ந்தவர் முத்துராஜா (42). இவருக்கு மீனாம்பிகை என்ற மனைவியும், ஆகாஷ் (10) என்ற மகன், தமிழ்காவியா (6) என்ற மகளும் உள்ளனர். வழக்கறிஞரான இவர், மாநகராட்சி 7-வது வார்டு அதிமுக கவுன்சிலராகவும், வட்ட செயலாளராகவும் இருந்தார். இவருடைய வார்டு கவுன்சிலர் அலுவலகம் இங்குள்ள விவேகானந்தர் தெருவில் உள்ளது. தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால் இந்த அலுவலகத்தை கடந்த 12-ம் தேதி பூட்டி, சாவியை மாநகராட்சி அதிகாரிகள் வாங்கிச் சென்றனர்.

ஆனால் மற்றொரு சாவியை கவுன்சிலர் வைத்திருந்தார். அடிக்கடி பின்புற கதவை திறந்து, அலுவலகத்திற்கு சென்று வந்துள்ளார். இதேபோன்று நேற்றும் அவர் அலுவலகத்திற்கு வந்தார். நேற்று மாலை வரை அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் வந்து பார்த்த போது அலுவலக அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் கவுன்சிலர் முத்துராஜா இறந்து கிடந்தார்.
இதையடுத்து அங்கு திரண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த மதுரை போலீஸ் துணை கமிஷனர் பாண்டி கங்காதர் மற்றும் செல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே அலுவலகத்தில் அவர் எழுதி வைத்திருந்த கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதில்,"உடல்நிலை பாதிக்கப்பட்டதால், தற்கொலை செய்து கொண்டேன். எனது குழந்தைகளை அம்மா ஜெயலலிதாதான் காப்பாற்ற வேண்டும். கவுன்சிலராக இருந்தாலும் நான் ஏழை. வாடகை வீட்டில்தான் குடியிருக்கிறேன்''என எழுதியிருந்தது. இந்த சம்பவம் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
மதுரையில் கடந்த வாரம் மாநகராட்சி 51-வது வார்டு அதிமுக கவுன்சிலர் விஜயராகவன் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்நிலையில் 7-வது வார்டு அதிமுக கவுன்சிலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications