வீடியோவில் சிக்கிய சிட்லபாக்கம் ராஜேந்திரன், சுகுமாருக்கு ஜெ. கல்தா! 6 எம்.பிக்களுக்கு சீட் மறுப்பு!

லோக்சபா தேர்தலுக்கான அதிமுகவின் வேட்பாளர்கள் பட்டியலை முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டார். தமிழகம், புதுவையின் 40 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை அவர் அறிவித்தார்.
இந்த பட்டியலில் தற்போதைய எம்.பிக்களான தம்பிதுரை, குமார், வேணுகோபால் ஆகியோருக்கு மட்டும் மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் ஆனந்தன், மயிலாடுதுறை ஓ.எஸ். மணியன், தென்சென்னை சிட்லபாக்கம் ராஜேந்திரன், சேலம் செம்மலை, திருப்பூர் சிவசாமி, பொள்ளாச்சி சுகுமார் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இவர்களில் சிட்லபாக்கம் ராஜேந்திரன், பொள்ளாச்சி சுகுமார் ஆகியோர் பணம் பெற்றுக் கொண்டு முன்பின் தெரியாதவர்களுக்கெல்லாம் பரிந்துரை கடிதங்களை தாராளமாக வழங்கினர் என்ற புகாருக்குள்ளானவர்கள். இவர்கள் பணம் பெற்றுக் கொண்டு பரிந்துரை கடிதம் தரும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதனாலேயே இவர்களுக்கு சீட் கொடுக்கப்படவில்லை. இதேபோல் மற்ற 4 எம்.பிக்களின் நாடாளுமன்ற செயல்பாடுகளில் ஜெயலலிதா அதிருப்தி அடைந்த காரணத்தால்தான் அவர்களுக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications