கள்ளத் தொடர்பு, சேடிஸ்ட்.. முன்னாள் அமைச்சர் செந்தமிழன் மீது மனைவி சரமாரி குற்றச்சாட்டு!
சென்னை: முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான செந்தமிழனிடம் இருந்து விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் அவரது மனைவி மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணையை ஜூலை 14ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.
சென்னை முதன்மை குடும்பநல கோர்ட்டில் செந்தமிழனின் மனைவி லட்சுமி (வயது 43) மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
எங்களுக்கு 4.4.94 அன்று திருமணம் நடந்தது. எங்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் உள்ளனர். அவர்கள் படிக்கின்றனர். இந்த நிலையில் செந்தமிழனுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.
இதுபற்றி கேட்டபோது, அந்தப் பெண் மூலம் ஆள்வைத்து என்னை தாக்கினர். செந்தமிழன் மது அருந்திவிட்டு என்னை கொடுமைப்படுத்துகிறார். மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் எனக்கு துன்பம் ஏற்படுத்துகிறார். மற்றவர் துன்பத்தில் மகிழும் சேடிஸ்ட் போல செயல்படுகிறார்.
அவருடன் வாழமுடியாமல் நானும் குழந்தைகளும் தனியாக வசிக்கிறோம். அவருடன் வாழ்வது சிரமமாக உள்ளது. எனவே செந்தமிழனிடம் இருந்து எனக்கு விவாகரத்து வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு ஜூலை 14-ந் தேதிக்குள் பதிலளிக்கும்படி நோட்டீஸ் பிறப்பிக்க உத்தரவிட்டார்.
இந்த நிலையில், சென்னை 2-வது கூடுதல் குடும்பநல நீதிமன்றத்தில் லட்சுமி மற்றொரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், எனக்கும், எனது 2 குழந்தைகளுக்கும் ஜீவனாம்சமாக ரூ.1.50 லட்சத்தை வழங்க செந்தமிழனுக்கு உத்தரவிடவேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மனு மீதான விசாரணையை 21-ந் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications