பாஸ் கேட்டு மாட்டிக்கொண்ட வேலுமணி.. இன்று CSK ஐபிஎல் மேட்ச் பார்க்க வந்த அதிமுக மாஜிக்களை பாருங்க!
சென்னை : சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை காண எம்.எல்.ஏக்களுக்கு பாஸ் வழங்க வேண்டும் என்று அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி சட்டப்பேரவையில் நேற்று கோரிக்கை விடுத்த நிலையில், அதற்கு உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்தார். இந்நிலையில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கண்டு ரசித்து வருகின்றனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில், விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அப்போது அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி பேசியபோது, "அதிமுக ஆட்சியில் சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை பார்க்க எம்எல்ஏக்களுக்கு பாஸ் வழங்கப்பட்டது. தற்போது 300-400 பாஸ் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் எங்களுக்கு கிடைக்கவில்லை. விளையாட்டுத்துறை அமைச்சர் அதற்கான வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கோரிக்கைக்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "சென்னையில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகள் நடக்கவே இல்லையே. அப்படி இருக்கும்போது நீங்கள் யாருக்கு பாஸ் கொடுத்தீங்கனு தெரியல.. சென்னையில் மேட்ச் நடக்கும்போதெல்லாம் என் தொகுதியில் உள்ள விளையாட்டு வீரர்கள் 150 பேரை என் சொந்த செலவில் டிக்கெட் வாங்கி போட்டியைக் காண வைக்கிறேன்" என்றார்.
மேலும், "ஐபிஎல் போட்டிகளை நடத்துவது பிசிசிஐ . உங்கள் நெருங்கிய நண்பரான அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாதான் அதன் தலைமை பொறுப்பில் உள்ளார். நாங்கள் கேட்டால் அவர்கள் பாஸ் தரமாட்டார். நீங்கள் கேட்டால் நிச்சயம் தருவார். எனவே அவரிடம் பேசி அனைத்து எம்எல்ஏக்களுக்கும் ஐந்து பாஸ் வாங்கித் தந்தால்கூட போதுமானது. நாங்கள் அதற்கு காசு வேண்டுமானாலும் கொடுக்கிறோம்." என்று உதயநிதி ஸ்டாலின் சிரித்தபடி தெரிவித்தார். உதயநிதியின் இந்தப் பேச்சால் முதல்வர் உட்பட சபையில் இருந்த அனைவரும் சிரித்தனர்.
இந்நிலையில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் கண்டு ரசித்து வருகின்றனர். அவர்கள் தங்கள் சொந்த செலவில் டிக்கெட் பெற்றே இன்றைய போட்டியைக் காண வந்திருப்பதாகத் தெரிகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications