பெரியார், அண்ணா, ஜெ.வுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்.. அதிமுக செயற்குழு தீர்மானம்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று அதிமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு, முன்னாள் முதல்வர் அண்ணா, பெரியார் ஆகியோருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று அதிமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுக செயற்குழு கூட்டம் சென்னையில் நடந்துள்ளது. இந்த கூட்டம் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடந்துள்ளது.

பல முக்கிய தீர்மானங்களை நிறைவேற்ற பல நாட்களுக்கு பின் இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதேபோல் அமைச்சர்கள், கட்சியின் நிர்வாகிகள் பலர் பங்கேற்று உள்ளனர். இதில் மொத்தம் அதிமுக செயற்குழு கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

முக்கியமாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் முன்னாள் முதல்வர் அண்ணா மற்றும் பெரியார் ஆகியோருக்கும் பாரத ரத்னா வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா வழங்க நீண்ட நாட்களாக அதிமுக அரசு கோரிக்கை வைத்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்த கோரிக்கை வலுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications