வேட்பாளரை மாற்ற வேண்டும்.. போர்க்கொடி தூக்கும் பாளையங்கோட்டை அதிமுகவினர்
நெல்லை: பாளையங்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்மகன் உசேனை மாற்ற கோரி போஸ்டர் ஓட்டப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
பாளையங்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது சொந்த ஊர் ஆற்றங்கரை பள்ளிவாசல் அருகே உள்ள புலிமாங்குளம். தற்போது இவர் சென்னையில் வசிக்கிறார். இவர் உருது மொழி பேசக் கூடியவர் என்பதால் மேலப்பாளையம் முஸ்லிம் ஓட்டுகள் இவருக்கு கிடைக்காது என்றும், இதனால் நெல்லை பாளையை சேர்ந்த ஒருவரை அறிவிக்க வேண்டும் எனவும் அதிமுகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழ் மகன் உசேன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அன்றே அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவருடன் பிரசாரத்துக்கு செல்லாமல் நெல்லை தொகுதிக்கு சென்று விட்டனர். இதுகுறித்து தமிழ்மகன் உசேன் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் வெளிப்படையாக பேசினார்.
இந்நிலையில் அவரை மாற்ற கோரி நெல்லை கலெக்டர் அலுவலகவளாகம் மற்றும் பாளை., மேலப்பாளையம் பகுதிகளில் போஸ்டர் ஓட்டப்பட்டுள்ளது. அதில் தனி மனித வாழ்க்கையில் ஓழக்கமற்ற தமிழ்மகன் உசேனை மாற்றினால் பாளையங்கோட்டை ஜெயலலிதா கோட்டையாகும்.
வெளியூர் வேட்பாளரை மாற்றி உள்ளூர் வேட்பாளரை அறிவித்தால் அம்மாவுக்கே வெற்றி என குறி்ப்பிடப்பட்டுள்ளது. இதனால் தமிழ்மகன் உசேன் வட்டாரம் கிடுகிடுத்து கிடக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications