Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் அ.தி.மு.க. பிரமுகர் நடுரோட்டில் வெட்டிக்கொலை: பெண் தாதா வெறிச்செயல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கே.கே.நகரில் அதிமுக பிரமுகர் ஒருவர் நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப பகையே கொலைக்கு காரணம் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை எம்.ஜி.ஆர். நகர் நெசப்பாக்கம் பல்லவன் சாலையை சேர்ந்தவர் விசுவநாதன் (வயது 35). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். அ.தி.மு.க.வை சேர்ந்த இவர், 128-வது வட்ட அம்மா பேரவை செயலாளராகவும் இருந்தார். அந்த பகுதியில் தீவிர அரசியல் செல்வாக்குடன் வலம் வந்தவர்.

AIADMK functionary hacked to death in Chennai

இவரது ரியல் எஸ்டேட் அலுவலகமும், கட்சி அலுவலகமும் சென்னை கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் உள்ளது. நேற்று மதியம் 2.30 மணியளவில் தனது கட்சி அலுவலகத்தில் இருந்து விசுவநாதன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சாப்பிடுவதற்காக சென்றுகொண்டிருந்தார்.

கே.கே.நகர் மாரியம்மன் கோவில் தெருவில் செல்லும்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 பேர் விசுவநாதனை, வழிமறித்து தாக்கினார்கள். அவரை மோட்டார் சைக்கிளை விட்டு கீழே தள்ளினார்கள். விஸ்வநாதன் சுதாரிக்கும் முன்பாகவே அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். அவரது உடல் முழுவதும் வெட்டு விழுந்தது. விசுவநாதன் நடுரோட்டில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். நிலையில் கிடந்தார். அவரை வெட்டி சாய்த்தவர்கள் மோட்டார் சைக்கிள்களில் ஏறி தப்பிச்சென்று விட்டனர்.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் படுகாயமடைந்த விசுவநாதனை சாலிகிராமம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். நேற்று மாலையில் சிகிச்சை பலனளிக்காமல் விசுவநாதன் பரிதாபமாக இறந்துபோனார். அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

AIADMK functionary hacked to death in Chennai

கொலை செய்யப்பட்ட விசுவநாதனின் மனைவி பெயர் மைதிலி (வயது 32). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். யஸ்வின் என்ற பெயரில் 5 வயது மகன் இருக்கிறான். விசுவநாதனுடன் அவரது தாயார் மற்றும் தம்பிகள் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர்.

இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக தியாகராயநகர் துணை கமிஷனர் பகலவன், அசோக்நகர் உதவி கமிஷனர் ஆறுமுகம், இன்ஸ்பெக்டர்கள் சந்துரு, சுப்பிரமணி, சத்தியலிங்கம் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசுவநாதனை நடுரோட்டில் வெட்டி சாய்த்து தீர்த்துக்கட்டி வெறியாட்டம் நடத்தியது கூலிப்படை கும்பல் என்று தெரியவந்தது.

குடும்ப பிரச்சினை மற்றும் சொத்து பிரச்சினை காரணமாக விசுவநாதன் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

தங்கையின் கணவர் வெறிச்செயல்

இவருடைய தங்கை அமுதாவுக்கும்,வரதன் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணமான சில மாதங்களுக்கு பிறகு தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் அமுதா வீட்டை விட்டு துரத்தப் பட்டார். தங்கையை அடி த்து விரட்டியதால் ஆத்திரம் அடைந்த விஸ்வநாதன் இதுகுறித்து வரதனிடம் நியாயம் கேட்டுள்ளார். அப்போது, அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், சசிகலா என்ற பெண்ணுக்கும் வரதனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவரை இரண்டாவதாக சேர்த்துக் கொண்டார். இதை அறிந்து விஸ்வநாதன் ஆத்திரம் அடைந்து, தனது தங்கையுடன் வாழ்க்கை நடத்தாத வரதனை கொலை செய்ய முடிவு செய்தார்.

இரண்டு முறை தப்பியவர்

இதை தெரிந்து கொண்ட வரதன் தனது மைத்துனரை கொலை செய்ய சரியான நேரத்திற்காக காத்திருந்தார். இதற்காக குற்றாலம் சென்று அரிவாள் வாங்கி வந்து பதுக்கினார். 2 முறை தாக்குதலும் நடத்தினார். இதில், விஸ்வநாதன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.இதைத் தொடர்ந்து போலீசார் வரதனை கைது செய்தனர். மேலும், தொடர் குற்ற செயலில் அவர் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். தற்போது, அவர் புழல் சிறையில் உள்ளார்.

கூலிப்படையினர் வெறி

விசுவநாதனை தீர்த்து கட்டிய கூலிப்படையினர் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. கூலிப்படை கும்பலை சேர்ந்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் குறித்து கருத்து கூறிய போலீசார்,"விஸ்வநாதன் உயிருடன் இருந்தால் நம்மையும், நமது கணவர் வரதனையும் தீர்த்துக் கட்டாமல் விடமாட்டார் என்ற எண்ணத்தில் சசிகலா கூலிப்படை மூலம் விஸ்வநாதனை கொலை செய்துள்ளார். அவரையும் அவர் அனுப்பிய கூலிப்படையையும் கைது செய்ய 5 தனிப்படைகளை அமைத்துள்ளோம். ஒருவரை கைது செய்து விட்டோம். விரைவில் அனைவரையும் கைது செய்வோம் என்றனர்.

அதிமுகவினர் சோகம்

கே.கே.நகரில் பிரபலமான அ.தி.மு.க. பிரமுகர் விசுவநாதன் சொந்த மைத்துனர் மூலம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். விசுவநாதன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தையொட்டி கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் ஏராளமான அ.தி.மு.க.வினர் சோகத்தோடு திரண்டிருந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+