For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாமக்கல்: அதிமுக நிர்வாகி தலை துண்டித்து கொடூர கொலை- ஒருவர் கைது

சேந்தமங்கலத்தில் அதிமுக பிரமுகர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Google Oneindia Tamil News

நாமக்கல்: சேந்தமங்கலத்தில் அதிமுக பிரமுகர் ஆர்.ஆர்.பி. சுரேஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக விமல் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட சுரேஷ் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை சேர்ந்தவர். இவர் ஜெ பேரவை ஒன்றிய செயலாளராகவும், வெட்டுக்காடு தொடக்க கூட்டுறவு வங்கி தலைவராகவும் உள்ளார். இவரது மனைவி மல்லிகா, 42. இவர் உத்திரகிடிகாவல் ஊராட்சி முன்னாள் தலைவராவார்.

AIADMK functionary hacked to death in Namakkal

ரியல் எஸ்டேட் தொழில் தொழில் செய்து வந்த சுரேஷ் நிலம் வாங்கி விற்பதில் பலரிடம் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. நேற்றிரவு 10 மணியளவில் வெட்டுகாடு பஸ் ஸ்டாப் பகுதிக்கு சென்ற சுரேஷ், அங்குள்ள டீக்கடை முன் காரை நிறுத்திவிட்டு நடந்து சென்றார்.

அப்போது திடீரென 5 பேர் கொண்ட கும்பல் சுரேஷை சுற்றி வளைத்து வெட்டினர். கண்ணிமைக்கும் நேரத்தில், நடந்த இந்த சம்பவத்தால் சுரேஷ் நிலை குலைந்தார். அவரது தலை துண்டானது.

தலை துண்டாகிய சுரேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து உயிரிழந்தார். உயிர் போகும் வரை காத்திருந்த அந்த கும்பல் பின்னர் அங்கிருந்து தப்பியோடினர்.

இதுகுறித்த தகவலறிந்து சம்பவ வந்த பேளுக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார், சுரேஷின் உடலை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வெட்டுக்காடு பகுதியில் நிலம் வாங்கியது தொடர்பாக சுரேசுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதனால், கொலை நடந்ததா என்பது பற்றியும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

5 பேர் கும்பலை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் மலைவேப்பம்குட்டையை சேர்ந்த விமல் குமார் என்பவரை போலீசார் கைது செய்த விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

English summary
According to reports, an AIADMK functionary was hacked to death by a gang of two members in Vettukadu near Sendamangalam in Namakkal district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X