திண்டுக்கல்லில் ஸ்டாலின் பேனர் கிழிப்பு: அதிமுக – திமுக மோதல்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நீதிமன்றம் அருகே விளம்பர போர்டு வைப்பது தொடர்பாக அ.தி.மு.க., தி.மு.க. வக்கீல்கள் மற்றும் கட்சியினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இரு கட்சியை சேர்ந்த 21 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து திண்டுக்கல்லில் பதட்டம் நிலவி வருகிறது
தமிழக அரசு சார்பில் திண்டுக்கல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்கில் 25.11.2013 அன்று மு.க.ஸ்டாலின் ஆஜராவதினால், அதற்காக தி.மு. கழக வழக்கறிஞர்கள் மு.க.ஸ்டாலினை வரவேற்க, முறையான முன் அனுமதி பெற்று, வரவேற்பு பேனர்கள் நீதிமன்றத்திற்கு வெளியே சாலையில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் வைத்திருந்தனர்.
இந்த நிலையில், இதற்கு எதிர்ப்பாக அ.தி.மு.க.வைச் சார்ந்த வழக்கறிஞர்கள் எந்தவிதமான அனுமதியும் பெறாமல் கடந்த 21-ந்தேதி அ.தி.மு.க. பேனர்களை வேண்டுமென்றே வைத்திருக்கிறார்கள்.
இதுகுறித்து இரு தரப்பு வழக்கறிஞர்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டு அந்தப் பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்வதற்காக வெள்ளிக்கிழமை காலை திண்டுக்கல் நீதிமன்ற வளாகத்தில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது.
அப்போது சுமார் 500-க்கும் மேற்பட்டவர்களுடன் திண்டுக்கல் நகர அ.தி.மு.க. செயலாளர் பாரதி முருகன் நீதிமன்ற வாயிலில் வைத்திருந்த மு.க.ஸ்டாலின் வரவேற்பு பேனர்களையும் கிழித்து எறிந்ததாக கூறப்படுகிறது. இதில் 10-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுக்கும், 25-க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கும் காயம் ஏற்பட்டது.
மோதல் காரணமாக பதற்றம் உருவானதால் போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்தில் அ.தி.மு.க.-தி.மு.க.வினர் புகார் அளித்தனர்.
அ.தி.மு.க. தரப்பில் இளைஞர் பாசறை துணைத்தலைவர் முருகபாண்டியன் புகாரின்பேரில் தி.மு.க. வக்கீல்கள் தேவராஜன், சுரேஷ்குமார், கிருஷ்ணன், சூசைராபர்ட், அன்பழகன், சாதிக், மாவட்ட துணைத் தலைவர் நாகராஜன், முன்னாள் நகராட்சி தலைவர் நடராஜன், கவுன்சிலர்கள் ராஜப்பா, மார்த்தாண்டன் உள்பட 211 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தி.மு.க. வக்கீல் சுரேஷ்குமார் புகாரின் பேரில் அ.தி.மு.க. நகர செயலாளர் பாரதிமுருகன், கவுன்சிலர் சோனா சுருளி, உறுப்பினர்கள் சின்னு, வேல்முருகன் உள்பட 204 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications