திருவல்லிக்கேணி பார்த்தசாரதிக்கு அப்ளிகேசன் போடும் அதிமுகவினர்... சீட் கிடைக்க கருணை காட்டுவாரா?
சென்னை: அதிமுகவில் சீட் கேட்டு விருப்பமனு கொடுத்தவர்களிடம் 10 நாட்களாக நேர்காணல் நடத்தி வருகிறார் ஜெயலலிதா. கட்சித்தலைமையிடம் இருந்து அழைப்பு வந்த உடனேயே சீட் கிடைத்த சந்தோசத்தில் திளைக்கும் பலரும் சென்னையில் இறங்கிய கையோடு திருவல்லிக்கேணி பார்த்தசாரதியை தரிசித்து ஒரு அப்ளிகேசனை போட்டு வைக்கின்றனராம்.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் மே 19ம் தேதி நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் வேட்பாளர்களை தேர்வு செய்ய கட்சிகள் மும்முரமாக உள்ளன.
கூட்டணி பேச்சு வார்த்தை, தொகுதிப்பங்கீடு என அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. ஆளும் அதிமுக முகாமில் பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா இம்முறை நேரடியாக வேட்பாளர்களை தேர்வு செய்து வருகிறார்.
சென்னையில் தொடங்கி குமரி வரைக்கும் 234 தொகுதிகளுக்கும் விருப்பமனு கொடுத்தவர்களில் தொகுதிக்கு 3 பேர் வீதம் அழைக்கப்பட்டு நேர்காணல் நடத்தி வருகிறார் ஜெயலலிதா.
அதிமுக சார்பில் போட்டியிட விரும்ப மனுத்தாக்கல் செய்தவர்களுக்கான முதல்கட்ட நேர்காணல் கடந்த 6ந் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, இரண்டாம் கட்ட நேர்காணல் கடந்த 21 ஆம் தேதி தொடங்கியது.

பார்த்தசாரதி கோவில்
ஜெயலலிதாவை சந்திக்க வந்து காத்துக்கிடப்பவர்களில் பெரும்பாலானோர் திருவல்லிகேணி பார்த்தசாரதி கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்து விட்டு வருகின்றனர். இதனால் கடந்த ஒரு வாரமாகவே பரபரப்பாக இருக்கிறது பார்த்தசாரதி கோவில் வளாகம்.

9வதுநாள் நேர்காணல்
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நேற்று நேர்காணல் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து திருச்சி, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விருப்பமனு கொடுத்தவர்களிடம் ஜெயலலிதா நேர்காணல் நடத்தினார்.

10வது நாளாக நேர்காணல்
எம்.எல்.ஏ சீட் கேட்டு விருப்ப மனு அளித்தவர்களுக்கு இன்று 10வது நாளாக நேர்காணல் போயஸ்கார்டனில் நடைபெற்றது. கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இன்றைய நேர்காணலில் பங்கேற்றனர்.

களை கட்டும் போயஸ் கார்டன்
கடந்த பத்து நாட்களாக நேர்காணல் நடைபெறுவதால் போயஸ் கார்டன் உள்ள சாலை அதிமுகவினரால் நிரம்பி வழிகிறது. ஆங்காங்கே சிறு கடைகளும் முளைத்து வியாபாரமும் களை கட்டி வருகிறதாம்.

செக்போஸ்ட்
நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு இருப்பவர்களின் பட்டியலை கையில் வைத்துக்கொண்டு பெயர் உள்ளவர்களை மட்டும்தான் போயஸ் கார்டன் தெருவுக்குள்ளேயே நுழைய முடிகிறது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த இந்த ஏற்பாடாம். ஆனாலும் சில தொண்டர்கள் உற்சாக மிகுதியில் போயஸ் கார்டன் சாலைக்குள் புகுந்து விடுகிறார்களாம்.

செல்போனுக்கு அனுமதியில்லை
வேதா நிலையத்திற்குள் ஜெயலலிதாவை சந்திக்க அனுமதிக்கப்படும் நபர்கள் முதலில், செல்போனைக் கீழே உள்ள அறையில் வைத்துவிட வேண்டும். கையில் எந்த பேப்பரையும் கொண்டு செல்ல அனுமதி இல்லை. ஒவ்வொரு நபரிடமும், இரண்டு நிமிடங்கள் முதல் நான்கு நிமிடங்கள் வரைதான் நேர்காணல் நடைபெறுகிறது.

கேள்விகள் என்னென்ன?
என்ன பொறுப்பில் இருக்கிறீர்கள்?... உங்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?... எவ்வளவு செலவு செய்ய முடியும்? என்ற கேள்விகளைத்தான் பெரும்பாலோரிடம் ஜெயலலிதா கேட்டுள்ளார்.

அக்கறையோடு விசாரணை
60 வயதைத் தாண்டியவர்களிடம், உங்கள் உடம்பு எப்படி உள்ளது? பீ.பி இருக்கிறதா உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அக்கறையோடு விசாரணை நடத்தும் ஜெயலலிதா, குட் லக், டோன்ட்வொர்ரி, அம்மா பார்த்துக்கிறேன்... என்று சொல்லி அனுப்புகிறாராம்.
யார் யாருக்கு எம்.எல்.ஏ சீட் கிடைக்குமோ? எல்லாம் அந்த பார்த்தசாரதி கையில் இருக்கிறது என்கின்றனர் இண்டர்வியூவிற்கு சென்று வந்தவர்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications