For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதல்வர் பொதுநிவாரண நிதி-அதிமுக ரூ.1 கோடி, எம்.பி, எம்.எல்.ஏக்களின் ஒரு மாதம் ஊதியம்- ஓபிஎஸ், ஈபிஎஸ்

முதல்வர் நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ரூ1 கோடி நிதி உதவி வழங்கப்படுவதாக அக்கட்சியின் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா தடுப்பு நிவாரண பணிகளுக்காக தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ரூ1 கோடியும் அதிமுக எம்.பி, எம்.எல்.ஏக்களின் ஒரு மாத ஊதியமும் வழங்கப்படும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Recommended Video

    மக்களுக்கு உதவி செய்வதே முக்கியம்.. ஒன்றிணைந்து செயல்படும் அரசியல் கட்சிகள்!

    தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்ததாக உள்ளது. கொரோனா மரணங்களும் அதிகரித்து கொண்டே இருக்கின்றன.

    தமிழக அரசு கொரோனா தடுப்பு பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வர் பொதுநிவாரண நிதிக்கு அனைவரும் நிதி உதவி அளிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனை ஏற்று அரசியல் கட்சிகள், தொழிலதிபர்கள் முதல்வர் நிவாரண நிதிக்கு நிதி உதவி அளித்து வருகின்றனர்.

    AIADMK

    திமுக அறக்கட்டளை சார்பில் ஏற்கனவே ரூ1 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல்வர் நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ரூ1 கோடி நிதி உதவி வழங்கப்படுவதாக அக்கட்சியின் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

    மேலும் அதிமுக எம்.பி., எம்.எல்.ஏக்களின் ஒரு மாத ஊதியமும் முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    AIADMK Donated Rs 1 Crore to Tamilnadu Chief Minister's Corona Relief Fund.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X