டாஸ்மாக் கடையை மூடுங்க... சிறுவன் ஆகாஷ் தலைமையில் படூரில் போராட்டம்
கேளம்பாக்கம் அருகே படூரில் டாஸ்மாக் கடைக்கு எதிராக சிறுவன் ஆகாஷ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம்: படூர் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட கோரி 7வது சிறுவன் ஆகாஷ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
படூரில் கல்லூரிக்கு அருகே டாஸ்மாக் கடை இருப்பதால் அதிகமான கல்லூரி மாணவர்கள் மது அருந்துகின்றனர் என்பது ஆகாஷின் குற்றச்சாட்டு. இதன் காரணமாக சிலர் பெண்களிடம் தகராறு செய்யும் நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளான்.
நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த படூரில் குடியிருப்புகள் நிறைந்த காலனி பகுதியையொட்டி அரசு டாஸ்மாக் கடை ஒன்று புதிதாக திறக்கப்பட்டது.

டாஸ்மாக் போராட்டம்
கடையை திறப்பதற்கு முன்பே அப்பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், கடை திறக்கப்பட்டதால் கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி இரவு கிராம மக்கள் டாஸ்மாக் கடையை உடைத்து சேதப்படுத்தினர்.

வழக்கு பதிவு
இதனால், அரசு சொத்தை சேதப்படுத்தியதாக 60 பெண்கள் உட்பட 132 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து டாஸ்மாக் கடை வழக்கம்போல் செயல்பட்டு வருகிறது.

சிறுவன் போராட்டம்
இந்நிலையில், மதுவுக்கு எதிராக அவ்வப்போது போராட்டங்களில் ஈடுபட்டு வந்த அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரின் 7 வயது மகன் ஆகாஷ், கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி படூர் டாஸ்மாக் கடையை மூடக்கோரி டாஸ்மாக் கடையின் முன்பு தனியாக அமர்ந்து படிக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்றார்.

தனி ஆளாக போராட்டம்
'குடியை விடு, படிக்க விடு' என்ற வாசகம் அடங்கிய பதாகையுடன் சிறுவன் தனி ஒருவனாக போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்பட்டது. இந்த நிலையில் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். கடை திறக்கப்படாது என்று உறுதியளித்தார். எனினும் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு செயல்கிறது.

தொடரும் போராட்டம்
இந்த நிலையில் சிறுவன் ஆகாஷ் தலைமையில் இன்று மீண்டும் போராட்டம் நடைபெறுகிறது. குடியிருப்புவாசிகளும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். படூர் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட கோரிய ஆகாஷ், அதுவரை தனது போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications