For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செய்தியாளரை தாக்கிய வழக்கு ... விசாரணைக்கு ஆஜராகாததால் விஜயகாந்துக்கு பிடிவாரண்ட்!

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்திற்கு சென்னை ஆலந்தூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பத்துள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : 2012ம் ஆண்டில் செய்தியாளரை தாக்கிய வழக்கில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்திற்கு ஆலந்தூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

கடந்த நவம்பர் 2012ம் ஆண்டு சென்னை விமான நிலையத்தில் தேமுதிக எம்எல்ஏக்கள் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட சிலர் ஜெயலலிதாவை சந்தித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது செய்தியாளர் பாலுவை விஜயகாந்த் வசைபாடி தீர்த்துவிட்டார்.

Alandur court issued warrant to DMDK chief Vijayakanth for assaulting Journalist at Chennai airport

மேலும் அவரது சகாக்கள் செய்தியாளரை கீழே பிடித்து தள்ளினர். இது தொடர்பாக சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் கடந்த 2013ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் விசாரணைக்கு ஆஜராகமல் விஜயகாந்த் தொடர்ந்து அவிர்த்து வந்துள்ளார்.

இதனால் இந்த வழக்கு இன்ற விசாரணைக்கு வந்த போது விஜயகாந்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ள நிலையில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Alandur court issued warrant to DMDK chief Vijayakanth for assaulting Journalist at Chennai airport on November, 2012 at a press brief.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X