தமிழக வரலாற்றில் முதல் முறை: முதல்வரை விரட்டியடித்த கிராம மக்கள்
மதுரை: அலங்காநல்லூருக்குள் நுழைய முடியாமல் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது திட்டத்தை மாற்றியுள்ளார். கிராமத்திற்குள் நுழைய முடியாமல் ஒரு முதல்வர் திரும்புவது இதுவே முதல் முறை ஆகும்.
ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசர சட்டம் கொண்டு வந்த தமிழக அரசின் நடவடிக்கையை மக்கள் ஏற்கவில்லை. இருப்பினும் வலுக்கட்டாயமாக மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டை நடத்த அரசு திட்டமிட்டது.

இதற்காக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மதுரை சென்றனர். வம்படியாக ஜல்லிக்கட்டை நடத்த அலங்காநல்லூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒரு காளையை கூட தர மாட்டோம் என்று அவர்கள் திட்டவட்டமாக கூறிவிட்டனர்.
மேலும் முதல்வர் வராமல் இருக்க அலங்காநல்லூரை சுற்றி சாலைகளில் குழி தோண்டி போக்குவரத்தை பாதிக்கச் செய்துள்ளனர் மக்கள். இதையடுத்து முதல்வர் அலங்காநல்லூருக்கு பதிலாக திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கோவில்பட்டியில் ஜல்லிக்கட்டை நடத்த திட்டமிட்டார். அங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் தமிழக அரசின் முயற்சி தோல்வி அடைந்துள்ளது.
ஒரு கிராமத்திற்குள் நுழைய முடியாமல் முதல்வர் திரும்புவது இதுவே முதல் முறை ஆகும். ஜல்லிக்கட்டு காளைகள் இன்று துள்ளி ஓடும். அவற்றை நானே அவிழ்த்துவிடுவேன் என்று முதல்வர் தெரிவித்தது எதுவும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications