ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி அலங்கநால்லூர் மக்கள் நாளை ரயில் மறியல்
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி அலங்காநல்லூர் மக்கள் நாளை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை: தை பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் பல மாவட்டங்களில் வீர விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ், சேவல்சண்டை போட்டிகள் களை கட்டும்.
ஜல்லிக்கட்டு என்றாலே மக்களுக்கு நினைவுக்கு வருவது அலங்காநல்லூர்தான். பொங்கல் நேரத்தில் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளும் அலங்காநல்லூருக்கு வந்து ஜல்லிக்கட்டு விளையாட்டை ரசித்து செல்வார்கள்.

ஜல்லிக்கட்டு போட்டியின் போது மாடுகள் துன்புறுத்தப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து பீட்டா, விலங்குகள் நல வாரியத்தின் வழக்கு தொடுக்கவே, உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித்துள்ளது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவில்லை.
இதனால் மதுரை மாவட்டத்தில் உள்ள பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூர் பகுதிகளில் வாடிவாசலில் கறுப்புக்கொடியேற்றி பொங்கலை துக்க நாளாக அனுசரித்தனர்.
இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்னமும் தீர்ப்பு அளிக்கவில்லை. இந்த நிலையில் மாநிலம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதி தராவிட்டால் நாளை அலங்காநல்லூர் மக்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அலங்காநல்லூர் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications