ஜெயலலிதா உடல்நிலை கவலைக்கிடம்.. அதிமுக எம்.பிக்களும் சென்னையில் முகாம்
அதிமுக எம்பிக்கள் அனைவரும் டெல்லியில் இருந்து சென்னை நோக்கி திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை: அதிமுக எம்பிக்கள் அனைவரும் டெல்லியில் இருந்து சென்னைக்கு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, டெல்லியில் இருந்த 37 அதிமுக எம்பிக்களும் அவசரமாக சென்னை திரும்பினர்.
நீர்ச்சத்து குறைபாடு காரணமாக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் சென்னை அப்போலோவுக்கு விரைந்தனர்.

நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக டெல்லியில் முகாமிட்டிருந்த 37 அதிமுக எம்பிக்களும் அவசரமாக சென்னை திரும்பினர். இதனால் மக்களவையில் அதிமுகவினர் வரிசை வெறிச்சோடி காணப்பட்டது. மக்களவை துணை சபாநாயகர் எம்.தம்பிதுரையும் திங்கட்கிழமை அவைக்கு செல்லவில்லை.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!











Click it and Unblock the Notifications