சென்னை- செங்கல்பட்டு, திருவள்ளூர் புறநகர் ரயில்கள் நாள் முழுவதும் ஒட்டுமொத்தமாக ரத்து!!
சென்னை: ரயில் தண்டவாளங்களில் வெள்ளம் தேங்கி நிற்பதால் சென்னை நகரில் இருந்து புறநகர்களுக்கு இயக்கப்படும் அனைத்து மின்சார ரயில்களும் இன்று நாள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் 40 மணிநேரத்துக்கும் கொட்டிய கனமழை சற்றே ஓய்ந்து சாரல்மழை பெய்து வருகிறது. இந்த இடைவிடாத பேய்மழையால் ரயில் தண்டவாளங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. பல அடி உயரத்துக்கு தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளன.

இதனால் நேற்று மாலை முதலே புறநகர் மின்சார ரயில்கள் பெருமளவு ரத்து செய்யப்பட்டன. தாம்பரம்- செங்கல்பட்டு மார்க்கத்தில் முழுமையாக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
@RailMinIndia @sureshpprabhu @DrmChennai pic.twitter.com/cFgAw2pxEZ
— @GMSouthernrailway (@GMSRailway) December 2, 2015 இந்நிலையில் சென்னை கடற்கரை- தாம்பரம்- செங்கல்பட்டு ரயில்கள் இன்று பகல் 12 மணிவரையும் சென்னை மூர்மார்க்கெட்- திருவள்ளூர் புறநகர் ரயில்கள் பகல் 10 மணிவரையும் சென்னை பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் புறநகர்கள் ரயில்கள் காலை 10 மணிவரையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மாலை 4 மணிவரை என நாள் முழுவதும் ஒட்டுமொத்தமாக புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுவிட்டது.
ItsSridharanR: #ICanAccommodate #ChennaiRainsHelp #chennairains #Nungambakkam https://t.co/oGpsTW9l5e
— ChennaiRainsHelp (@ChennaiRainsH) December 2, 2015 இருப்பினும் இந்த ரயில் சேவை தடை மேலும் பல மணிநேரத்துக்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
#ChennaiRains State Emergency - 1070; District Emergency - 1077; Electricity - 1912; Fire & Rescue -101All Numbers- https://t.co/PNZoiIhjyB
— Gargi Rawat (@GargiRawat) December 2, 2015 -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
'அமரன்' மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு பெருமை சேர்த்த சென்னை! பிரதான சாலைக்கு பெயர் சூட்டி அதிரடி! -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க!












Click it and Unblock the Notifications