வீட்டை விட்டு விரட்டிவிட்டாரா தீபா?: மாதவன் பரபர பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனக்கும் தீபாவுக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை என்று மாதவன் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தனது கணவர் மாதவனை வீட்டை விட்டு விரட்டிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இது குறித்து மாதவன் கூறுகையில்,

இல்லை

இல்லை

எனக்கும், தீபாவுக்கும் இடையே பிரச்சனை எதுவும் இல்லை. நேற்று தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொல்ல வீட்டிற்கு சென்றேன். காலையில் இருந்து மாலை வரை அங்கு தான் இருந்தேன்.

வாக்குவாதம்

வாக்குவாதம்

நான் வீட்டில் இருந்தபோது வெளியே நின்று கொண்டிருந்த தொண்டர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதற்கு யாரோ எனக்கும் தீபாவுக்கும் இடையே பிரச்சனை என்று கிளப்பிவிட்டுள்ளார்கள்.

தீபா

தீபா

என்னை பற்றி என் மனைவிக்கு நன்கு தெரியும். தீபா காதுபட யாராவது எங்களை பற்றி தவறாக பேசினால் அவர் கண்டிப்பார். அவரை சுற்றியுள்ளவர்கள் நல்லவர்கள் போன்று நடித்து வெளியே வதந்தியை கிளப்புகிறார்கள்.

பிரச்சனை

பிரச்சனை

பேரவையில் இருந்து கொண்டு பேரவையை கலைக்க முயற்சி செய்யும் ஆட்களை நான் அடையாளம் கண்டது தான் பிரச்சனை. என்னை தீபாவிடம் இருந்து பிரிக்க சதி நடந்து வருகிறது. அது ஒரு காலமும் பலிக்காது.

கட்சி பிரச்சனை

கட்சி பிரச்சனை

கட்சி பிரச்சனை தான் உள்ளது. அது விரைவில் தீர்க்கப்படும். எனக்கும், தீபாவுக்கும் இடையே குடும்ப பிரச்சனை இல்லை. தினமும் வீட்டிற்கு சென்று தீபாவுடன் பேசுகிறேன் என்றார் மாதவன்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Madhvan said that all is well between him and his wife Deepa who is the niece of former CM Jayalalithaa.
Please Wait while comments are loading...