4 மடங்கு அதிக மழையால் வெள்ளக்காடான திருவள்ளூர்... முகாம்களில் ஏராளமானோர் தஞ்சம்
திருவள்ளூர் : வடகிழக்குப் பருவமழைக்கு அதிகம் பாதிக்கப்பட்டது காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள்தான். அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழியும் நிலையில் பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கிவிட்டன என்பதுதான் வேதனை. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நான்கு மடங்கு மழை அதிகம் பெய்துள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கொ.வீரராகவ ராவ் செவ்வாய்க்கிழமை மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையான உதவிகள் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக எடுக்கப்பட்டுள்ளன.
இதில் அனைத்து துறை அதிகாரிகள், ஊழியர்கள் இணைந்து இந்த பணியை மேற்கொண்டு வருகிறோம். கடந்த ஆண்டில் இதே நவம்பர் மாதத்தில் 14.2 செ.மீ. மழை அளவு பதிவாகி இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அதை விட 4 மடங்கு கூடுதலாக மழை பெய்துள்ளது.
இதனால், திருவள்ளூர் மாவட்டத்தை சுற்றியுள்ள ஏரிகள் அனைத்தும் நிரம்பி வருகின்றன. கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் கிடைக்கும் விதத்தில் 22 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த குழுவில் ஒரு துணை கலெக்டர், 4 தாசில்தார்கள் இருக்கிறார்கள். 11 தாலுகாக்களில் இந்த 22 குழுக்களும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 111 மீட்பு முகாம்களில் 8 ஆயிரத்து 423 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 18 ஆயிரம் பேர் வெளி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 3 வேளைகளிலும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, இந்த முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்களில் 5 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கு பால் வழங்கப்படுகிறது.
முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்களுக்காக 22 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேறி வருவதால், அதை தடுப்பதற்காக ஒரு குழுவில் 4 மாவட்ட அலுவலர்கள் அடிப்படையில், 22 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications