நேரம் சரியில்லை... ஜெ. இறந்து விட்டார்.. இந்திய மருத்துவ கவுன்சில் வினோத விளக்கம்!
ஜெயலலிதாவிற்கு உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளித்தும் அவர் உயிரிழந்தது நமக்கு நேரம் சரியில்லை என்றுதான் கூற வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
சென்னை: ஜெயலலிதாவிற்கு அப்பல்லோ மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை பற்றியும், அவரது மரணம் பற்றியும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வரும் நிலையில், உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளித்தும் அவர்உயிரிழந்தது நமக்கு நேரம் சரியில்லை என்றுதான் கூற வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து நேற்று அப்பல்லோ மருத்துவமனை அறிக்கையும், எய்ம்ஸ் டாக்டர்கள் அறிக்கையும் வெளியானது. இதனை மேற்கோள் காட்டி தமிழக அரசு நீண்ட விளக்கம் அளித்தது.
இதன் தொடர்ச்சியாக இன்று இந்திய மருத்துவ சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் தங்களின் சிகிச்சை பற்றி விளக்கம் அளித்தனர். இப்போது இத்தனை விளக்கம் தருபவர்கள் ஒரு போட்டோவையோ? வீடியோவையோ வெளியிட்டார் சந்தேகம் தீர்ந்து விடும் என்பதே உண்மையான அதிமுக தொண்டர்களின் கோரிக்கையாகும்.

அரசியலாக்காதீர்கள்
இந்திய மருத்துவக்கவுன்சில் மாநிலத்தலைவர் ரவிசங்கர் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர், மருத்துவர்கள் மீது யாரும் குற்றம் சொல்ல வேண்டாம் என்றும் இதை யாரும் அரசியலாக்க வேண்டாம் என்றும் தெரிவித்தார்.

நேரம் சரியில்லை
ஒரு உயிரைக்காப்பற்றத்தான் நாங்கள் முயற்சி செய்வோம், மோசமான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட ஜெயலலிதாவின் உயிரைக்காக்கவும் 75 நாட்களாக போராடினோம். உலகத்தரத்துடன் கூடிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டது என்றாலும் அவர் உயிரிழந்து விட்டார். இது நமக்கு நேரம் சரியில்லை என்றுதான் கூற வேண்டும் என்று கூறினார்.

விளக்கம் தர மறுப்பு
யாரையும் பார்க்க விடாதது ஏன் என்பது பற்றியோ, சிசிடிவி கேமரா இல்லை என்பது பற்றியோ தங்களால் விளக்கம் தரமுடியாது என்றும் இந்திய மருத்துவக்கவுன்சில் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர் விளக்கம் ஏன்?
அரசியல் பிரச்சினையில் மருத்துவர்களின் சிகிச்சையை குறை சொல்லக்கூடாது என்பதற்காகவே இந்த விளக்கத்தை அளித்துள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஜெயலலிதா உயிரிழந்து 100 நாட்களை எட்ட உள்ள நிலையில் இன்னும் என்னென்ன விளக்கங்களை யார் யார் தரப்போகிறார்களோ?
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications