தூத்துக்குடிக்காக கட்சிகள் ஒன்று கூட வேண்டும்.. கோரிக்கை வைத்த ஜிக்னேஷ் மேவானி
பாஜகவிற்கு எதிராக ஒன்று கூடிய அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிசூட்டிற்கு எதிராகவும் போராட வேண்டும் என்று ஜிக்னேஷ் மேவானி கோரிக்கை வைத்துள்ளார்.
தூத்துக்குடி: ஏதேச்சாதிகார பாஜகவிற்கு எதிராக ஒன்று கூடிய அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிசூட்டிற்கு எதிராகவும் போராட வேண்டும் என்று ஜிக்னேஷ் மேவானி கோரிக்கை வைத்துள்ளார்.
மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அமைதிப் பேரணியை நடத்திய பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. போலீசின் இந்த கண்மூடி தனமாக தாக்குதல் காரணமாக இதுவரை 14 பேர் பலியாகி உள்ளனர். ஆனாலும் இதைவிட அதிக பேர் பலியாகி இருக்கலாம் என்று அச்சமூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை அதிகாரப்பூர்வமாக 13 பேர் மரணம் அடைந்துள்ளனர். 25க்கும் அதிகமானோர் என்ன ஆனார்கள், எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. இதில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதில் சிலர் மிகவும் மோசமான நிலையில் கவலைக்கிடமாக உள்ளனர்.
இந்த நிலையில் இந்து கொடூரம் குறித்த தற்போது குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி கருத்து தெரிவித்துள்ளார். குஜராத்தின் வட்காம் தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட ஜிக்னேஷ் மேவானி வெற்றி பெற்றார். பாஜக கட்சிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் இளம் தலைவர்களில் இவரும் ஒருவர்.
இன்று குமாரசுவாமி அவர்களின் பதவியேற்பு விழாவில் ஏதேச்சாதிகார பாஜகவிற்கு எதிராக ஒன்று கூடிய அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிசூட்டில் பாதிக்கபட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களது போராட்டத்தில் பங்கு கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்#Sterlite pic.twitter.com/sNsL7tRpaN
— Jignesh Mevani (@jigneshmevani80) May 23, 2018
நேற்று நடந்த கர்நாடக முதல்வர் குமாரசாமி பதவியேற்பு விழா குறித்து டிவிட் செய்த அவர் ''இன்று குமாரசுவாமி அவர்களின் பதவியேற்பு விழாவில் ஏதேச்சாதிகார பாஜகவிற்கு எதிராக ஒன்று கூடிய அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிசூட்டில் பாதிக்கபட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களது போராட்டத்தில் பங்கு கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்'' என்றுள்ளார்.
குஜராத்தை சேர்ந்த இவர் தமிழிலேயே டிவிட் செய்துள்ளார். இவரது டிவிட்டிற்கு பெரிய அளவில் ஆதரவு ஏற்பட்டுள்ளது. இவரது டிவிட் காரணமாக ஸ்டெர்லைட் பிரச்சனை தேசிய அளவில் கவனத்தை பெற்றுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications