காவிரி விவகாரம் தொடர்பான போராட்டத்தில் அனைத்து கட்சிகளும் பங்கேற்க வேண்டும் - பி.ஆர்.பாண்டியன்
காவிரி பிரச்சினை போராட்டங்களில் அனைத்து கட்சிகளும் பங்கேற்க பி.ஆர்.பாண்டியன் அழைப்பு விடுத்துள்ளார்.
திருச்சி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி 3-ந் தேதி நடைபெறும் மறியல் போராட்டத்தில் அனைத்து கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகத்தில் பல்வேறு தரப்பினர் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி 3-ந் தேதி மாநிலம் தழுவிய ரெயில் மறியல், சாலை மறியல், மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை, விமான நிலையங்கள் முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது.
இந்த போராட்டத்தில், திருச்சியில் விமானங்களை தரையிறக்க விடமாட்டோம். இந்த போராட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, த.மா.கா., அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என அனைத்து கட்சியினரும் பங்கேற்க வேண்டும்.
அதேபோல, தமிழக அரசு பேருந்துகளை இயக்கக்கூடாது. ரெயில்கள், விமானங்கள் போக்குவரத்தையும் ரத்து செய்ய வேண்டும். அரசு அலுவலகங்கள், பள்ளிக் கூடங்கள் செயல்படக் கூடாது.
தமிழகமே ஸ்தம்பித்தது என்ற நிலையை உருவாக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்ற நிலை வருமளவுக்கு தமிழகமே ஸ்தம்பித்தது என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
தஞ்சையில் நடைபெறும் ரெயில் மறியல் போராட்டத்தில் நான் பங்கேற்கிறேன். திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்கு அய்யாக்கண்ணு தலைமை தாங்குகிறார். திருவாரூரில் நடைபெறும் போராட்டத்தில் மன்னார்குடி ரெங்கநாதன் பங்கேற்கிறார். நாகையில் நடக்கும் போராட்டத்தில் முன்னோடி விவசாயிகள் பங்கேற்பார்கள். இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications