நேற்று இரவு தொடங்கியது.. இன்னும் விடவில்லை.. தமிழகம் முழுக்க கொட்டித் தீர்க்கும் தீவிர கன மழை!
Recommended Video
சென்னை: நேற்று இரவில் இருந்து தற்போது வரை தமிழகம் முழுக்க பரவலாக மழை பெய்து வருகிறது. பல இடங்களில் தமிழகத்தில் கனமழை பெய்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த 2 நாட்களாக விடமால் மழை பெய்துள்ளது.
தமிழகம் முழுக்க இன்னும் மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. முக்கியமாக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

எங்கு மழை
நேற்று ராமேஸ்வரம், தங்கச்சிமடம் மற்றும் பாம்பனில் தலா 11 செ.மீ. மழை பதிவானது. தஞ்சையில் அணைக்கட்டில் 10 செ.மீ. மழை பதிவானது. வெட்டிக்காடில் 9 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளன.

எங்கு மழை
திருவாரூரில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டியில் தலா 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது.நீடாமங்கலம் மற்றும் முத்துப்பேட்டையில் தலா 9 செ.மீ. மழை பெய்தது. பாண்டவையாறு தலைப்பில் 8 செ.மீ. மழைப்பதிவு. அங்கு தொடர்ந்து இப்போதும் மழை பெய்து வருகிறது.

திருவண்ணாமலையில் எப்படி
தற்போது திருவண்ணாமலையில் வந்தவாசி, நெற்குணம், தெள்ளார், தேசூர், சாலவேடு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மதுரையில் மேலூர், திருவாதவூர், ஒத்தக்கடை, சிட்டம்பட்டி, கீழவளவு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கொட்டாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

வேறு எங்கேல்லாம் மழை
அதேபோல் நேற்று இரவில் இருந்து சிதம்பரம், கன்னியாகுமரி, கரூர், சிவகங்கை, செங்கல்பட்டு, கடலூர், நெல்லை, அரியலூர், காஞ்சிபுரம், கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கோவையில் இன்று அதிகாலையில் இருந்து கனமழை பெய்து வருகிறது. நீலகிரியிலும் மழை பெய்து வருகிறது.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications