எங்களுக்கும் ஒரு சீட் ஒதுக்க வேண்டும்: அதிமுகவுக்கு பார்வர்டு பிளாக் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

Allot one seat for us: All India Forward Bloc asks ADMK
மதுரை: நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி கட்சியான தங்களுக்கும் ஒரு சீட் ஒதுக்குமாறு அதிமுகவுக்கு அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

மதுரையில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மாநிலக்குழு கூட்டம் மாநில தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

அப்போது அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கதிரவன் எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறுகையில்,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேரையும் விடுதலை செய்யும் நோக்கில் முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றினார். இதை காங்கிரஸ் கட்சியும், மத்திய அரசும் கடுமையாக எதிர்த்து வருவதோடு, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்றுள்ளது. இந்த விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் மத்திய காங்கிரஸ் அரசைக் கண்டிக்கிறோம்.

அதிமுக கூட்டணியில் கடந்த 2009ம் ஆண்டு முதல் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி இடம் பெற்றுள்ளது. நடைபெற்று முடிந்த அனைத்து தேர்தலிலும் நாங்கள் அதிமுக கூட்டணிக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளோம்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் எங்கள் கட்சிக்கு ஒரு சீட் ஒதுக்குமாறு, அதிமு பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவை அகில இந்திய நிர்வாகிகள் சந்தித்து வலியுறுத்த உள்ளனர். நல்ல தகவல் வரும் என நம்புகின்றோம் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+