இதற்கு முன்பு எந்த தமிழக ஆளுநராவது இப்படி செய்து பார்த்துள்ளீர்களா?
நெல்லை: தமிழக மக்கள் பலருக்கும் நினைவு தெரிந்து, முதல் முறையாக ஒரு ஆளுநர் இம்மாநிலத்தில் புனித நீராடிய நிகழ்வு இன்று அரங்கேறியுள்ளது.
முதன்முறையாக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற போது 1992ம் ஆண்டு நடந்த மகாமகம் திருவிழாவில் பங்கேற்க தனது தோழி சசிகலா உடன் கும்பகோணம் சென்றிருந்தார் ஜெயலலிதா.
அப்போது ஜெயலலிதாவை பார்க்க கூடிய கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, அந்த கோரச் சம்பவத்தில் 60 பேர் உயிரிழந்தனர். இதன்பிறகு 2 வருடங்கள் மன்பு நடந்த மகாமகத்தில் பங்கேற்க ஜெயலலிதா வரவில்லை. இதனால் பாதுகாப்பு போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

எடப்பாடி, அமைச்சர்கள்
மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் மஹா புஷ்கரத் திருவிழாவில் கடந்த ஆண்டு செப்டம்பரில் கலந்துகொண்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, காவிரியில் புனிதநீராடினார். அமைச்சர்களும் புனிதநீராடினார்கள். இதுதவிர அதிமுக அமைச்சர்கள் அவ்வப்போது எங்காவது கோயில்களில் புனித நீராடுவது வழக்கம். தமிழகத்தை சேர்ந்த பிரபலமான சாமியார்களும் வட இந்தியாவிற்கு கூட சென்று புனித நீராடி வருவார்கள்.

ஆளுநர் புரோகித்
ஆனால், வெகு காலத்திற்கு பிறகு தமிழகத்தில், ஒரு பெரும் புள்ளி ஒருவர் புனித நீராடியுள்ளார். அவர் வேறுயாருமல்ல, மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித். தாமிரபரணி ஆற்றுக்கு புஷ்கர விழா இன்று நடத்தப்பட்டது. அதில்தான், ஆளுநர் பங்கேற்று புனித நீராடினார். இதற்காக தென்காசிக்கு ரயிலில் சென்ற ஆளுநரை, நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் ரயில் நிலையத்திற்கே சென்று வரவேற்றார்.

பாபநாசம்
இதன்பிறகு, காரில் பாபநாசம் சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பாபநாசம், தாமிரபரணி நதிக்கரையில் புனித நீராடினார். வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க, ஆளுநர் மீது புனித குடங்களில் தண்ணீரை சேகரித்து ஊற்றினர். இதை பய பக்தியோடு ஏற்றுக்கொண்டார் ஆளுநர். இந்த செய்தி ஊடகங்களில் இன்றைய முக்கிய செய்தியாக மாறிப்போயிருந்தது.

ஆளுநர் செய்திகள்
தமிழகத்தில் எந்த ஒரு ஆளுநரும், புனித நீராட சென்றதாக நினைவு இல்லை. ஆனால் அதை பன்வாரிலால் புரோகித்தான் முறியடித்துள்ளார். இதுவரை பதவி வகித்த ஆளுநர்கள் ராஜ்பவனில் மட்டுமே இருந்து பணியாற்றிய நிலையில், நேரில் ஆய்வு நடத்துவதாக கூறி பன்வாரிலால் புரோகித் ஒவ்வொரு ஊருக்காக போய் வந்தார். இப்போது புனித நீராடல் மூலம் மீண்டும் செய்திகளில் அடிபட்டுள்ளார் ஆளுநர்.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம்












Click it and Unblock the Notifications