சென்னை ஆழ்வார்ப்பேட்டை தனியார் நிறுவனத்தில் தீவிபத்து- தீயை அணைக்க போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை ஆழ்வார் பேட்டையில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் இன்று திடீரென்று தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தீயை அணைக்கும் பணியில் 5 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன.
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் நேற்றிரவு தீப் பிடித்தது. திடீரென்று கொழுந்துவிட்டு எரிந்த தீயால் அருகில் அமைந்திருந்த வீடுகளில் உள்ளவர்கள் பீதி அடைந்தனர்.

இதனையடுத்து தீ பரவாமல் இருக்க உடனடியாக தீயணைப்பு அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கப் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் தீப்பிடித்தற்கான காரணம் இன்னும் சரியாகத் தெரியவில்லை. மேலும், உள்ளே இருந்த பொருட்கள், சேத விவரம் ஆகியவையும் தீயை அணைத்த பின்பே முழுமையாக தெரிய வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications