அந்த "வைக்கோல் மூட்டை"யை பார்த்தால்.. பூரித்துபோன மயிலாடுதுறை.. ஆஹா, வைத்தீஸ்வரன் கோயில் தையல் நாயகி
மயிலாடுதுறை: மயிலாடுதுறை சீர்காழியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்று, காண்போரை சிலிர்க்க வைத்து வருகிறது. என்ன காரணம்?
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது... இது மிகவும் சிறப்பு வாய்ந்த பழமையான கோயிலாகும்.

பாதயாத்திரை: இந்த கோயிலுக்கு காரைக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டு வருவது வழக்கமாகும்.. முக்கியமாக, வருடந்தோறும், சித்திரை மாதத்தில் இரண்டாவது செவ்வாய்க்கிழமை குலதெய்வ வழிபாடு நடத்துவார்கள்..
இந்த வழிபாட்டுக்காக, காரைக்குடி, கந்தர்வகோட்டை, சிவகங்கை, பரமக்குடி,மானாமதுரை,திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வைத்தீஸ்வரன் கோயிலுக்கு திரண்டு வருவார்கள்..
தையல் நாயகி: இந்த ஸ்ரீதையல்நாயகி அம்மன், தங்களுடைய ஊரைச்சேர்ந்த பெண் என்ற ஐதீகத்தின்படி, பொதுமக்கள் சீர்வரிசையை கூண்டு வண்டிகளில் ஏற்றி நடைபயணமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
இந்த சீர்வரிசைகளை ஏற்றி வருவதற்காக மாட்டு வண்டிகளை பயன்படுத்துவார்கள்.. இதே மாட்டுவண்டியில், கால்நடையாக வரும் பக்தர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட பொருட்களையும் ஏற்றி வருவார்கள்.
சிறப்பு அறைகள்: இந்த மாட்டு வண்டிகள் பார்ப்பதற்கே வித்தியாசமாக இருக்கும்.. கூண்டு போல மேல்புறம் வடிவமைக்கப்பட்டிருக்கும்.. கீழேயுள்ள வண்டிக்குள், பொருட்கள் வைப்பதற்காக பிரத்யேகமான அறைகள் போல வடிவமைக்கப்பட்டிருக்கும்.. இதில் ஒவ்வொரு அறையிலும், பாதயாத்திரையாக நடந்து வருபவர்களின் பொருட்கள், மெத்தைகள், மாடுகளுக்கான வைக்கோல் போன்றவை அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்...

இரவு நேரங்களில் மேற்கொள்ளும் பாதயாத்திரை என்பதால், வண்டியிலிருக்கும் முகத்தடிக்கு கீழே மண்ணெண்ணையால் எரியும் லாந்தர் விளக்கு தொங்கவிடப்படும். இரவு நேரங்களில் இந்த விளக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.
மாட்டு வண்டிகள்: அந்தவகையில், இந்த வருடத்துக்கான வழிபாடு நேற்றிரவு சிறப்பாக துவங்கி நடந்தது.. பக்தர்களின் வருகையை கருத்தில்கொண்டு, 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.. அதுமட்டுமல்ல, மேலும் பக்தர்கள் வசதிக்காக மயிலாடுதுறை, சிதம்பரம், திருச்சி, தஞ்சாவூர் ,மற்றும் சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை, காரைக்குடி, தஞ்சாவூர், சிவகங்கை, ஒரத்தநாடு, கந்தர்வகோட்டை, கீழ சிவல்பட்டி, பேராவூரணி, திருச்சி, மற்றும் பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள், பாதயாத்திரையாக வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி குலதெய்வ வழிபாட்டை நிறைவேற்றினார்கள்.
மஞ்சள் குச்சி: சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமையன்று தங்களுடைய வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காக, தங்களது வீட்டில் மஞ்சள் தடவிய குச்சியை வைத்து பூஜை செய்வார்கள்.. பாதயாத்திரை துவங்கும் மக்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதற்கு காணிக்கையாக அந்த குச்சியை கோவில் கொடிமரத்தில் செலுத்துவது வழக்கமாம்..
அம்பாள் மற்றும் சுவாமியை தரிசித்து வழிபடும் நகரத்தார் மக்கள் தங்களுடைய புதிய வேண்டுதலுக்காக கொடி மரத்திலிருந்து மாற்று குச்சியை எடுத்துச் செல்வதும் வழக்கமாக இன்றும் உள்ளது..
பெருமிதம்: இந்த விழாவில், கிட்டத்தட்ட 54 மாட்டுவண்டிகளுடன் பக்தர்கள் பங்கேற்றனர்.. ஒரே நேரத்தில் 54 மாட்டு வண்டிகளும் நள்ளிரவில் லாந்தர் விளக்குடன், பயணப்பட்ட காட்சி காண்போரை சிலிர்க்க வைத்தது... காலங்கள் பல கடந்தும்கூட, கிட்டத்தட்ட 300 வருடங்களுக்கும் மேலாக, பாரம்பரிய நிகழ்ச்சி நடந்துவருவது மயிலாடுதுறையை பெருமை கொள்ள செய்திருக்கிறது...!!
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications