அம்பத்தூர் பால் பண்ணையைச் சுற்றிலும் தண்ணீர்- பால் பாக்கெட் விநியோகம் பாதிப்பு
சென்னை: சென்னையில் பெய்த கனமழையால் அம்பத்தூர் பால் பண்ணையை சுற்றி தண்ணீர் நிற்கிறது. இதனால் மற்ற பகுதிகளில் இருந்து பால் பாக்கெட்டுகள் வரவழைக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
சென்னையில் பெய்த கனமழை காரணமாக கொரட்டூர் ஏரி நிரம்பி, உபரி தண்ணீர் அனைத்தும் குடியிருப்பு பகுதிகளுக்கும் வந்து விட்டது.

இதனால் கொரட்டூர் - பட்டரைவாக்கம் ரோடு வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
கொரட்டூரில் அமைந்துள்ள அம்பத்தூர் பால் பண்ணையிலும் தண்ணீர் புகுந்து விட்டது. நேற்று முன்தினம் தண்ணீர் தேங்கி கிடந்தாலும் பாக்கெட் பால் தயாரிப்பு பணி பாதிக்கப்படவில்லை.
ஆனால் நேற்று பால் பண்ணையில் இடுப்பளவுக்கு தண்ணீர் புகுந்து விட்டது. பால் பண்ணையை சுற்றிலும் வெள்ளக்காடாக தண்ணீர் நின்றதால் ஊழியர்களால் உள்ளே செல்ல முடியவில்லை. மின்சாரமும் நேற்று காலையில் இருந்து இல்லை.
இதனால் பால் லாரிகள் உள்ளே வர முடியாததால் பாக்கெட் பால் தயாரிப்பு பணி நிறுத்தப்பட்டது. இதனால் மாற்று ஏற்பாடாக விழுப்புரம், காக்களூர் பகுதியில் இருந்து சென்னைக்கு பாக்கெட் பால் வரவழைக்கப்பட்டு இன்று வினியோகிக்கப்பட்டது. வெளியூர்களில் இருந்து பாக்கெட் பால் வந்ததால், சென்னையில் சில பகுதிகளில் பால் சப்ளை தாமதமானது.
சோழிங்கநல்லூர், மாதவரம் பால் பண்ணையில் தண்ணீர் தேங்கினாலும் பணிகளில் பாதிப்பு ஏற்படவில்லை. இதனால் அங்கு பாக்கெட் பால் தயாரிப்பு பணி தடையின்றி நடைபெற்றது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications