விவாகரத்தான பெண்ணிடம் ஆபாசமாக பேசிய ஆட்டோ டிரைவர் கைது! ஆம்பூரில் பரபரப்பு
ஆம்பூர்: ஆம்பூரில் ஆட்டோவில் சென்ற பெண்ணிடம் தவறாக பேசி பாலியல் தொழில் செய்ய அழைத்ததாக ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் சரவணன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை உமர் சாலையில் உள்ள நியாய விலை கடைக்கு ஆட்டோவில் ஏற்றிச் சென்றுள்ளார்.

அப்போது ஆட்டோ ஓட்டுநர் சரவணனிடம் அவர் பேசிக் கொண்டிருந்தபோது தனது குடும்ப சூழ்நிலை குறித்தும் தனக்கு விவாகரத்து ஆகிவிட்டது என்பதையும் தெரிவித்தாராம். இதனை தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர் சரவணன், "நான் சொல்வதைக் கேட்டால் உனக்கு பணம் கிடைக்கும்" என்று தவறான நோக்கத்துடன் பேசினாராம்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ஆட்டோ ஓட்டுநர் சரவணனை கைது செய்து ஆம்பூர் சிறையில் அடைத்தனர்.
விவாகரத்து ஆன பெண்ணிடம் தவறாக பேசிய ஆட்டோ ஓட்டுநரை கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Click it and Unblock the Notifications
