ஷார்ஜா புத்தக கண்காட்சியில் வரலாறு படைக்கும் தமிழ் நூல்: 'ஷார்ஜாவின் சிற்பி' புத்தக வெளியீட்டு விழா

Subscribe to Oneindia Tamil

ஷார்ஜா: உலக அளவில் புகழ்பெற்ற 45-வது ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியில், தமிழ் இலக்கிய உலகிற்கு பெருமை சேர்க்கும் ஒரு வரலாற்று நிகழ்வு நடைபெற உள்ளது. எழுத்தாளர் முதுவை ஹிதாயத் எழுதியுள்ள 'ஷார்ஜாவின் சிற்பி - மேதகு ஷேக் டாக்டர் சுல்தான் பின் முஹம்மது அல் காஸிமி' என்ற புத்தகம் வாசகர்களின் பார்வைக்கு வரவுள்ளது.

இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் சார்பில் நடத்தப்படும் இந்நூல் வெளியீட்டு விழா, வரும் 2026 நவம்பர் 5-ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெறுகிறது. ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் உள்ள 7-ஆம் அரங்கில் அமைந்திருக்கும் எழுத்தாளர் பேரவை அரங்கில் (Writers Forum), பிற்பகல் 3.30 மணி முதல் 3.55 மணி வரை இந்தச் சிறப்பு விழா திட்டமிடப்பட்டுள்ளது.

Sharjah International Book Fair

இன்றைய நவீன ஷார்ஜாவை அறிவுக் களஞ்சியமாகவும், அமைதியான பண்பாட்டு நகரமாகவும் மாற்றிய பெருமை அதன் ஆட்சியாளர் மேதகு ஷேக் டாக்டர் சுல்தான் பின் முஹம்மது அல் காஸிமி அவர்களையே சாரும். அவருடைய இளமைக்காலம், அரிய தலைமைத்துவப் பண்பு, மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் சாதனைகளை மிக எளிய தமிழில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் இந்நூல் விளக்குகிறது.

குறிப்பாக, ஷார்ஜாவின் பெருமைமிகு ஆட்சியாளர் பற்றித் தமிழில் எழுதப்பட்ட முதல் நூல் இதுவே என்பது உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்குக் கிடைத்த தனிப் பெருமையாகும். இந்நூலின் வெளியீடு அரபு மண்ணின் வரலாற்றுப் பெருமையைத் தமிழ் வாசகர்களுக்கு மிக நெருக்கமாகக் கொண்டு சேர்க்கும் பாலமாக அமையும்.

Sharjah International Book Fair

இந்நிகழ்வில் ஐக்கிய அரபு அமீரக அரசு அதிகாரிகள், முக்கிய சமூகத் தலைவர்கள், தமிழறிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் புத்தகப் பிரியர்கள் பலர் நேரில் கலந்துகொள்ள உள்ளனர்.

ஷார்ஜா புத்தகத் திருவிழாவிற்கு வருகை தரும் தமிழ் வாசகர்கள், இலக்கிய அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இவ்விழாவில் நேரில் பங்கேற்றுச் சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அன்போடு அழைக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+