12 வயசுதான்னு பார்க்காமல் சிறுமிக்கு ரூட் விட்ட கல்லூரி மாணவன்.. வீட்டுக்கே போய் குத்தி தள்ளிய அப்பா

Subscribe to Oneindia Tamil

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே 12 சிறுமிக்கு செல்போன் வாங்கிக் கொடுத்த 21 வயது கல்லூரி மாணவரை, சிறுமியின் தந்தை குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள வெண்பாவூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணகுமாரின் மகன் அபிமன்யு (21). இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த (திமுக) முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன் மகள் 12 வயது சிறுமிக்கு செல்போன் வாங்கிக் கொடுத்து அவருடன் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த சிறுமியின் தந்தை பாலசுப்பிரமணியன், அபிமன்யுவின் வீட்டிற்குச் சென்று தட்டிக் கேட்டுள்ளார்.

Shocking Murder in Perambalur

இரும்புக் கம்பியால் குத்திக் கொலை

அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், பாலசுப்பிரமணியன் இரும்புக் கம்பியால் அபிமன்யுவை தாக்கியதுடன், கத்தியால் இடது பக்க மார்பில் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அபிமன்யு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த கைகளத்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அபிமன்யுவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள சிறுமியின் தந்தை பாலசுப்பிரமணியனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 12 வயது சிறுமிக்கு செல்போன் வாங்கிக் கொடுத்த விவகாரத்தில் ஏற்பட்ட தகராறு, 21 வயது கல்லூரி மாணவரின் கொலையில் முடிந்த சம்பவம் வெண்பாவூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+