அமீரக ஓட்டப்பந்தயத்தில் அசத்திய தமிழக வீரர்! 60 வயதிலும் 10 கிமீ ஓடி நாகர்கோவில் முதியவர் அபார சாதனை

Subscribe to Oneindia Tamil

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஏழு முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில் 'எமிரேட்ஸ் வில்லேஜஸ் ரன் சீரிஸ்' (EVRS) என்ற பெயரில் புகழ்பெற்ற தேசிய அளவிலான ஓட்டப்பந்தயத் தொடர் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாட்டின் பாரம்பரிய கிராமப் பகுதிகளை மையமாக வைத்து நடத்தப்படும் இந்த ஓட்டப்பந்தயத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.

அந்த வகையில், இத்தொடரின் முக்கிய ஓட்டப்பந்தயப் போட்டி உம் அல் குவைன் பகுதியில் அமைந்துள்ள பலஜ் அல் முல்லா என்ற இடத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் நடைபெற்ற 10 கிலோ மீட்டர் தூர ஓட்டத்தில், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த வீரர்களுக்கான தனிப் பிரிவு நடத்தப்பட்டது.

Tamil Nadu Veteran Shines in UAE

இந்தப் பிரிவில் தமிழ்நாட்டின் நாகர்கோவிலைச் சேர்ந்த செய்யது அலி என்பவர் கலந்து கொண்டார். கடுமையான போட்டிக்கு நடுவே, அபார தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் இலக்கை நோக்கி ஓடிய செய்யது அலி, பந்தய தூரத்தை வேகமாக கடந்து 2-வது இடத்தைப் பிடித்து அசத்தலான சாதனை படைத்தார்.

60 வயதைக் கடந்த நிலையிலும் இளம் வீரர்களுக்கு இணையாகச் செயல்பட்டு வெற்றி பெற்ற அவருக்குப் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் முறைப்படி பதக்கமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கி சிறப்பித்தனர்.

Tamil Nadu Veteran Shines in UAE

வயது என்பது வெறும் எண்தான் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் வெளிநாட்டில் தமிழ்நாட்டிற்குப் பெருமை தேடித்தந்த செய்யது அலிக்கு, அமீரகத்தில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் விளையாட்டுப் பிரியர்கள் தங்களது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இவரது இந்த சாதனை உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் சிறந்த முன்னுதாரணமாகப் பாராட்டப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+