சென்னைக்கு புல்லட் ரயில்! கனவு நிஜமாகுது! ஒப்புதல் கொடுத்த பிரதமர் நரேந்திர மோடி!
சென்னை: சென்னை உட்பட நாடு முழுவதும் 4,000 கி.மீ புல்லட் ரயில் சேவைக்கு பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்திருப்பதாக, மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருக்கிறார்.
இந்த புல்லட் ரயில் திட்டம் சென்னை, பெங்களூர், ஹைதராபாத் மற்றும் அமராவதி ஆகிய நகரங்களை இணைக்கும். இதன் மூலம் சென்னை-பெங்களூர் பயண நேரம் வெறும் 73 நிமிடங்களாக குறையும்.

மொத்தம் 4,000 கி.மீ
நேற்று பெங்களூர்-மும்பை வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரயில் சேவையை, பெங்களூரில் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், "4,000 கிலோமீட்டர் தொலைவிற்கு புல்லட் ரயில் சேவைக்கான விரிவான பாதை அமைக்க பிரதமர் மோடி ஏற்கனவே ஒப்புதல் கொடுத்துவிட்டார். இதன் மூலம், தென்னிந்தியாவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட போகிறது. தென்னிந்தியாவின் பொருளாதார மையமாகவும்.. தொழில்நுட்பத்தில் முன்னோடியாகவும் விளங்கும் பெங்களூர், சென்னை, ஹைதராபாத், அமராவதி ஆகிய நகரங்கள் இனி புல்லட் ரயில் மூலம் இணைக்கப்படும்.
சென்னை-பெங்களூர் ரூட்
இந்த ரயில் சேவை பயன்பாட்டுக்கு வரும்போது, சென்னை-பெங்களூர் இடையே பயண நேரம் வெறும் 73 நிமிஷங்களாக குறையும். சென்னை சென்டரலிலிருந்து புறப்படும் இந்த ரயில், பூந்தமல்லி, பரந்தூர், சித்தூர், கோலார், கொடிஹல்லி, ஒயிட்ஃபீல்டு என கடைசியாக பெங்களூரை அடையும். மொத்தமாக இந்த ரயில் 28 கி.மீ தொலைவை பூமிக்கடியில் கடக்கிறது. அதிகபட்சமாக மணிக்கு 350 கி.மீ வேகத்தில் இந்த ரயில் பறக்கும்.
அடுத்தடுத்து வெளியாக உள்ள அறிவிப்பு
அதேபோல, பெங்களூர்-ஹைதராபாத் இடையேயான பயண நேரம் 2.10 மணி நேரமாக குறையும். இதை தொடர்ந்து அடுத்த கட்டமாக, மேலும் 3,000 கிலோமீட்டர் தொலைவிற்கு புல்லட் ரயில் சேவையை நீட்டிப்பது குறித்து.. பிரதமர் ஆலோசித்து வருகிறார். அடுத்த சில ஆண்டுகளில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும்" என்று தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவின் மக்கள் தொகை அதிகம் என்பதால் ரயில் போக்குவரத்துக்கு நிறைய டிமாண்ட் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் 2.3 கோடி மக்கள் ரயில்களில் பயனிக்கின்றனர். இவர்களுக்காக 13,198 ரயில்கள் இயக்கப்படுகிறது. இவைகள் நாடு முழுவதும் 7,325 ரயில் நிலையங்களை கனெக்ட் செய்கிறது. ஆனால், பிரச்சனை என்னவெனில்.. ரயில்களின் வேகம் போதுமானதாக இல்லை என்பதுதான். இந்தியன் ரயில்வேயில் ரயில்களின் சராசரி வேகம் 40-55 கி.மீதான்.
புல்லட் ரயில்களின் தேவை
எனவே இந்த பிரச்சனையை ஓவர்கம் செய்ய வந்தே பாரத் ரயில்கள் கொண்டுவரப்பட்டன. இந்த ரயில்கள் கிட்டத்தட்ட சதாப்தி ரயில்களின் வேகத்தை விட கொஞ்சம் வேகமாக இயக்கப்படுகின்றன. எனவே, நீண்ட தொலைவுகளை குறைந்த நேரத்தில் கவர் செய்கின்றன. ஆனாலும்.. சென்னை டூ கன்னியாகுமரி, சென்னை டூ ஹைதராபாத் என மிக நீண்ட தொலைவு பயணத்தில் இன்னும் வேகம் தேவையாக இருக்கிறது. எனவேதான் புல்லட் ரயில்கள் உள்ளே வந்தன.
மத்திய அரசின் பிளான்
இன்னும் இந்தியாவில் புல்லட் ரயில்கள் இயக்கப்படவில்லை. அகமதாபாத்-மும்பை இடையே புல்லட் ரயில் பாதை அமைக்க கடந்த 2017ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. சொல்லிக்கொள்ளும் அளவு வேகத்தில் இல்லை என்றாலும்.. ஓரளவு மும்முரமாக பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2029 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில்.. அந்த ஆண்டில் இந்த வழித்தடத்தில் புல்லட் ரயில் இயக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
சென்னையை பொறுத்தவரை இப்போதுதான் ரூட் கிளியர் அப்ரூவல் கிடைத்திருக்கிறது என்பதால், நம்மூருக்கு புல்லட் ரயில் வர.. அடுத்த 10-15 ஆண்டுகள் ஆகலாம் என்று சொல்லப்படுகிறது.



Click it and Unblock the Notifications
