நபிகள் நாயகம் கூறியதை நான் கூறினால் இஸ்லாத்தை இழிவுபுடுத்துவதா?: பாத்திமா பாபு
சென்னை: ஜெயலலிதா அம்மாவின் காலடியில் சொர்க்கம் உள்ளது என்று கூறி தான் இஸ்லாத்தை இழிவுபடுத்தவில்லை என்று அதிமுக நட்சத்திர பேச்சாளரான நடிகையும், செய்தி வாசிப்பாளருமான பாத்திமா பாபு தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பெரிய அக்ரஹாரம் வண்டிப்பேட்டையில், அதிமுக சார்பில் அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளரான நடிகை பாத்திமா பாபு கடந்த 19ம் தேதி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில், தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது என நபிகள் நாயகம் தெரிவித்துள்ளார். அப்படி பார்த்தால் ஜெயலலிதா அம்மாவின் காலடியில் தான் சொர்க்கம் உள்ளது என்றார்.
நபிகள் நாயகம் கூறியதை ஜெயலலிதாவுக்கு ஏற்றது போன்று பேசிய பாத்திமா பாபு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்நிலையில் இது குறித்து அவர் கூறுகையில்,

நபிகள் நாயகம்
நபிகள் நாயகத்தின் பெயரை நான் கூறக் கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. ஏன் என்றால் அவர் அனைவருக்கும் சொந்தமானவர். இறை தூதர் என்று தான் சேர்த்து கூற வேண்டும்.

அம்மா
அம்மாவை நபிகள் நாயகம் என்று கூறினால் தான் அது தவறான ஒப்பீடு ஆகும். நான் ஒன்றும் அப்படி சொல்லவில்லையே. இஸ்லாத்தை தீவிரமாக பின்பற்றிய தந்தையால் வளர்க்கப்பட்டவள் நான்.

மதங்கள்
அனைத்து மதங்களையும் மதிப்பவள் நான். இந்து மதத்தில் இருந்து மாறியதால் நான் இப்படி பேசுவதாக கூறுவது சரி அல்ல. இஸ்லாத்தில் ஹராம் ஆக்கப்பட்ட எந்த விஷயத்தையும் செய்ய மாட்டேன்.

மதச்சாயம்
நபிகள் நாயகம் கூறியதை தான் நானும் தெரிவித்தேன். நான் எதிர்க்கட்சியில் இருப்பதால் எனது பேச்சிற்கு மதச்சாயம் பூசுகிறார்கள். நான் எந்த மதத்தையும் இழிவுபடுத்துபவள் இல்லை என்று எனக்கு நெருக்கமானவர்களுக்கு தெரியும். அப்படி இருக்கும் நான் மிகவும் நேசிக்கும் என் மதத்தை இழிவுபடுத்துவேனா?
-
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications