அம்மா குடிநீர் பாட்டிலில் இரட்டை இலையா...??
சென்னை: தமிழக அரசின் அம்மா குடிநீர் திட்டம் முதல் சர்ச்சையைச் சந்தித்துள்ளது. அம்மா குடிநீர் பாட்டிலில் இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.
பாட்டிலில் இரட்டை இலை சின்னத்தை சன்னமான முறையில் வரைந்துள்ளதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.
எனவே இது லோக்சபா தேர்தலை மனதில் கொண்டும், மக்களை அதிமுகவுக்கு ஆதரவாக திருப்பவும் நடக்கும் முயற்சி என்றும் விவாதம் வெடித்துள்ளது.

செப்டம்பர் 15 முதல்
அம்மா குடிநீர் என்ற புதிய திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் 15ம் தேதி தொடங்கி வைத்தார்.

பத்து ரூபாய்க்கு மினரல் வாட்டர்
பொதுமக்களுக்கும், பஸ் பயணிகளுக்கும் பாதுகாப்பான குடிநீரை குறைந்த விலையில் வழங்கும் திட்டம் இது. ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் ரூ. 10க்கு இதன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

படு சூடான விற்பனை
அம்மா குடிநீர் என்ற பெயரிலான இந்த தண்ணீர் பாட்டில் விற்பனைக்கு வந்ததுமே படு வேகமாக விற்றுத் தீர்ந்தது. தமிழகம் முழுவதும் பஸ் நிலையங்கள், தொலைதூர பஸ்களில் இது விற்கப்படுகிறது.

இரட்டை இலை...
இந்தநிலையில் பாட்டிலில் உற்றுப் பார்த்தால் மட்டுமே தெளிவாகத் தெரியும் வகையில் இரட்டை இலைச் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை வெடித்துள்ளது.

இலையா.. இல்லையா..
ஆனால் இதை இரட்டை இலை இல்லை என்று அரசு சார்பில் விரைவில் மறுப்பு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பறக்கும் குதிரைன்னு சொன்னவங்களாச்சே...
ஏற்கனவே மெரீனா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவுச் சின்னத்தின் முகப்பில் இரட்டை இலை வடிவிலான புதிய சிலை உருவாக்கப்பட்டது. இதுகுறித்து கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டபோது அது இரட்டை இலை இல்லை, பறக்கும் குதிரை என்று அரசு சார்பில் கூறப்பட்டது நினைவிருக்கலாம்.
எனவே இந்த சர்ச்சைக்கும் உரிய விளக்கம் வெளியாகும் என்று தெரிகிறது.
-
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications