"Amma My Leader".. மெரீனாவில் போட்டும் கூட்டத்தைக் காணோமே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அம்மா மை லீடர் என்ற பெயரில் அதிமுக சார்பில் சென்னை மெரீனாக கடற்கரையில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் கூடாததால் ஏற்பாடு செய்தவர்கள் அதிருப்தி அடைந்து விட்டனராம்.

தமிழக சட்டசபைக்கு மே மாதம் 16ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு விதமாக மக்களைக் கவரும் வேலையில் குதித்துள்ளன.

இந்த நிலையில் அதிமுகவும் அந்த வேலையில் தற்போது தீவிரமாகியுள்ளது. அம்மா மை லீடர் என்ற பெயரில் இளைஞர்கள், இளம் பெண்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியை சென்னை மெரீனா கடற்கரையில் நேற்று நடத்தினர்.

இந்த நிகழ்ச்சியின்போது, கல்வி, சுகாதாரம், தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதல்வர் ஜெயலலிதா புரிந்துள்ள சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கிக் கூறினர்.

முதல்வர் ஜெயலலிதாவை தங்களின் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ள கோடிக்கணக்கான இளைஞர்கள், மீண்டும் அவரின் தலைமையில் தமிழக அரசு அமையும் வகையில், வரும் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இசை நிகழ்ச்சி உள்ளிட்டவையும் இடம் பெற்றன. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம்தான் கூடவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+