"சின்னம்மா" சிறைக்குப் போனதும் ஜெ. சமாதியில் பாட்டு நின்னு போச்சே.. தொண்டர்கள் ஷாக்!
அதிமுகவில் அதிகாரச் சண்டை உச்சத்தில நடந்து வருவதால் அக்கட்சியின் தலைவர் ஜெயலலிதாவை யாரும் கண்டு கொள்ளவில்லை. அவரது சமாதியில் பாடப்படும் வானமே இடிந்தது பாட்டு நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் நாள்தோறும் ஒலித்துக் கொண்டிருந்த 'வானமே இடிந்தது அம்மா' என்ற பாடல் நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி ஜெயலலிதா மறைந்தார். 6ம் தேதி அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் சமாதி அருகில் அடக்கம் செய்யப்பட்டது.
அன்றிலிருந்து, அவரது சமாதியில் மலர் தூவி அலங்கரிக்கப்பட்டு வந்தது. மேலும், அங்கு வானமே 'இடிந்தது அம்மா... வாழ்வே முடிந்தது அம்மா' என்று பாடல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும்.

அதிமுகவினர் மரியாதை
ஜெயலலிதா மறைந்த நாளில் இருந்து தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் இங்கு வந்து மொட்டை அடித்துக் கொண்டனர். மலர் தூவி தங்களது தலைவருக்கு மரியாதை செய்தனர்.

மலர் அலங்காரம்
ஜெயலலிதா சமாதியை பார்க்க வரும் அனைவருக்கும் தொடக்கத்தில் நீர், மோர், உணவு உள்ளிட்டவைகளை அதிமுகவினர் வழங்கினர். பின்னர், தினமும் மலர் தூவி ஜெயலலிதாவின் சமாதி அலங்கரித்தனர். ‘வானமே இடிந்து விழுந்ததம்மா' என்ற பாடலும் தினந்தோறும் அங்கு ஒலித்து வந்தது. இவை அனைத்தும் அதிமுக சார்பில் செய்யப்பட்டு வந்தது.

பராமரிப்பு நிறுத்தம்
இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஜெயலலிதா சமாதியில் எந்த பராமரிப்பும் நடைபெறவில்லை. நேற்று ஜெயலலிதா சமாதியில் காய்ந்த பூக்களே காணப்பட்டன. தொண்டர்கள் கொண்டு வரும் பூக்கள் மட்டுமே சமாதியில் தூவப்பட்டது.

‘அம்மா’ பாடலும் நிறுத்தம்
மேலும், ஜெயலலிதா சமாதியில் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் ‘வானமே இடிந்தது அம்மா... வாழ்வே முடிந்தது அம்மா' என்ற பாடலும் நிறுத்தப்பட்டுள்ளது. இது தினமும் சமாதிக்கு வந்து செல்லும் அதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications